வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திராவிடனுக்கு ஏன் அகலப்பாதை என்ற நிலைப்பாட்டில் இருந்து வெளிவந்ததால் பல அனுகூலங்கள் - அதில் இது போல சுற்றுலா மேம்பட நல்ல வாய்ப்பு.
சென்னை: மகா கும்பமேளாவை ஒட்டி, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக, வாரணாசி, அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து உள்ளது.மகா கும்பமேளா, அடுத்த ஆண்டு ஜனவரி, 13ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்திக்கு பக்தர்கள் செல்வர்.அவர்களின் வசதிக்காக, ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.திருநெல்வேலியில் இருந்து, 2025 ஜன., 16ல் புறப்படும் இந்த ரயில், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது.ஒன்பது நாட்கள் சுற்றுலாவுக்கு, 'ஏசி' இல்லாத படுக்கை வசதி பெட்டியில் பயணிக்க - 28,100 ரூபாயும், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணிக்க, 44,850 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, கூடுதல் தகவல்களை பெற, 90031 40739, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
திராவிடனுக்கு ஏன் அகலப்பாதை என்ற நிலைப்பாட்டில் இருந்து வெளிவந்ததால் பல அனுகூலங்கள் - அதில் இது போல சுற்றுலா மேம்பட நல்ல வாய்ப்பு.