உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிபரான பின் முதல்முறை இந்தியா வந்த அநுரகுமார திசநாயகே!

அதிபரான பின் முதல்முறை இந்தியா வந்த அநுரகுமார திசநாயகே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே இந்தியா வந்துள்ளார்.இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே அமோக வெற்றி பெற்றார். ஏ.கே.டி. என்று அந்நாட்டு அரசியலில் அழைக்கப்படும் அவரின் வெற்றியை மக்கள் உற்சாக கொண்டாடினர்.தேர்தலில் வென்று அதிபரான அநுரகுமார திசநாயகே, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அவரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அரசு முறை சுற்றுப்பயணத்தில் அநுரகுமார திசநாயகே, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேச உள்ளார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். புதுடில்லியில் நடக்கும் தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்று, புத்த கயாவுக்கும் செல்லும் வகையில் அநுரகுமார திசநாயகே பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 16, 2024 15:43

தமிழக மீனவர்களைப் பத்தி ஒண்ணும் பேசாம இப்பிடி கை குலுக்கி விருந்து சாப்புட்டு ஒரு 50000 கோடி கைச் செலவுக்கு குடுத்து அனுப்புவாய்ங்க.


Oviya Vijay
டிச 15, 2024 22:13

கவலை வேண்டாம் அதிபர் அவர்களே... நீங்கள் இந்தியா வரும்பொழுது சிவப்புக் கம்பளம் விரித்து நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுக்கு வரவேற்பு கொடுப்பார்கள்... ஏனென்றால் எங்கள் மத்திய அரசின் எண்ணத்தின் படி நீங்கள் தான் இந்தியாவிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத தமிழ்நாட்டு மீனவர்களை துன்பறுத்திக் கொண்டே இருக்கிறீர்களே... அந்த ஆனந்தத்தில் எங்கள் மத்திய அரசால் உங்களுக்கு ராஜ உபசாரம் கண்டிப்பாக தரப்படும்... எம் தமிழக மீனவர்களும் இந்தியா சார்ந்தவர்கள் என்ற எண்ணமே துளியும் இல்லாத ஒரு கையாலாகாத திறனற்ற மத்திய அரசைத் தானே நாங்கள் இங்கே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ளோம்... அவர்களைப் பார்த்து பத்து ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் பழைய கதைகள் பேச ஆரம்பிப்பார்கள்... ச்சும்மா கண்துடைப்புக்கு வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது போல இங்கே பாசாங்கு காட்டுவார்கள்... கண்டு கொள்ள வேண்டாம்... கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்ப்பதற்கு அதிகமாகவே இந்தியாவிடமிருந்து உதவிகள் உங்களுக்கு வந்து சேரும்... நீங்கள் வழக்கம் போல் உங்கள் நாட்டிற்கு திரும்பியவுடன் எங்கள் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தாராளமாக தொடரலாம். உங்களை எதிர் கேள்வி கேட்குமளவிற்கு இங்கே எங்கள் மத்திய அரசாங்கத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை... உங்கள் நாட்டிற்கு தேவையான நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலான பொருளுதவி, புத்தம் புதிய ரயில் பெட்டிகள், UPI பண பரிவர்த்தனையை உங்கள் நாட்டில் செயல்படுத்த வழிகாட்டு உதவிகள் இன்னும் பல பல உதவிகள் உங்களை வந்தடையும்... பொருளாதாரத்தில் நிலைகுலைந்த உங்கள் நாட்டை எமது வழிக்கு கொண்டு வந்து எங்களது நெடுநாளைய மீனவர் பிரச்சனையை தீர்க்க வழி இருந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் எங்கள் மத்திய அரசு இருக்கும் வரை நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம் அதிபர் அவர்களே...


Mohan
டிச 16, 2024 10:02

யோவ் கச்சத்தீவை குடுத்தது யாரு, அவன் கிட்ட கேளுயா ...அப்பறோம் எல்லை தாண்டி மீன் பிடிச்ச கைது பண்ணாம தூக்கி வெச்சு கொஞ்சுவாங்களா.. எத்தனை நாளைக்கூட ஏமாத்துவீங்க ஊர... இலங்கை ராணுவம் ஒன்னும் இந்தியா எல்லைக்குள்ள வந்து கைது பன்னலயே ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை