உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  டில்லி தமிழ் சங்கத்துக்கு சிருங்கேரி சுவாமி விஜயம்

 டில்லி தமிழ் சங்கத்துக்கு சிருங்கேரி சுவாமி விஜயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தலைநகர் டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், கடந்த 14ம் தேதி ஸ்ரீபாலவேணுகோபால சுவாமி கோவில், சங்கட மோசன் அனுமன் கோவில் மற்றும் தேவி காமாட்சி அம்மன் கோவில்களுக்கு விஜயம் செய்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி, மூர்த்திகளுக்கு வஸ்திரங்கள் சமர்ப்பித்து ஆரத்தி காட்டி வழிபட்டார். அப்போது ஆச்சாரியார், ''ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரம், அம்பிகை காமாட்சியின் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. ''ஒரு தெய்வீக ஒற்றுமை என்னவென்றால் இதே நாளில் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் காமாட்சி கோவிலில் தரிசனம் செய்தேன். இன்று டில்லி காமாட்சி கோவிலில் தரிசனம் செய்வது இறைவனின் சித்தம்,'' என்றார். நேற்று அவர், டில்லி தமிழ் சங்கத்திற்கு விஜயம் செய்து, அங்கு திரண்டிருந்த தமிழர்களுக்கு அருளுரை வழங்கினார். இதுதவிர, ஜி.எம்.ஆர்., ஏரோ சிட்டி நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் ஆசி வழங்கினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 16, 2025 06:45

சங்கரம் போற்றி. சங்கராச்சார்யம் போற்றி. காமாட்சி அம்மா போற்றி.


சாமானியன்
நவ 16, 2025 06:13

அடியேன் டில்லியில் இருந்தபோது ( 2012 ) டில்லி தமிழ் சங்கத்தில் 2 மணி நேரம் வேளுக்குடி சார் உபன்யாசம் கேட்டு அனுபவித்தது நன்றாக ஞாபகத்தில் உள்ளது. வார இறுதியில் தமிழ் பிரபலங்கள் நிகழ்ச்சி அல்லது திரைப்படம் இருக்கும். இறுதியில் இரவு உணவு பாக்கு மட்டையில் வழங்கப்படும்.


சமீபத்திய செய்தி