உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது போர்ட் பிளேர்: பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு

ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது போர்ட் பிளேர்: பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் ' எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காலனித்துவ முத்துரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ba9n19z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முந்தைய பெயரானது, காலனித்துவ பாரம்பரியத்தை கொண்டு இருந்தது. ஸ்ரீவிஜயபுரம் என்ற பெயரானது, நமது சுதந்திர போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தனித்துவத்தையும் பிரதிபலிக்கிறது.நமது சுதந்திர போராட்டம் மற்றும் வரலாற்றில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. சோழ அரசின் கடற்படை தளமாக செயல்பட்ட இந்த தீவானது, இன்று நமது பிராந்திய மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.இங்கு தான் நேதாஜி முதன்முறையாக நமது தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர சாவர்க்கர் மற்றும் பலரை இங்கு தான் சிறையில் அடைத்தனர். இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

கீரன் கோவை
செப் 14, 2024 22:15

சமூக நீதிக்குப் பாடுபட்ட ஈவேரா ....????????????


அப்பாவி
செப் 14, 2024 09:49

டில்லி பெயர் மாற்றம் எப்பவோ?


Sathyanarayanan Sathyasekaren
செப் 13, 2024 23:12

இதே போன்று, நாலாந்தா பல்கலைக்கழகத்தை எரித்த, அங்கே இருந்த ஆசிரியர்களை கொன்ற கொடுங்கோலன் பக்தியார் கில்ஜி பெயரில் இருக்கும், ஊர் மற்றும் ரயில்வே நிலையத்தின் பெயரை மாற்றவேண்டும், வெளிநாட்டினர் கேவலமாக பார்க்கின்றனர். ஏன் இன்னும் மாற்றவில்லை என்று கேட்கின்றனர்.


Natarajan Ramanathan
செப் 13, 2024 23:05

விஜயபுரம் என்பதைவிட வீர் சாவர்க்கர் ஐலண்ட்ஸ் என்று பெயர் வைப்பது இன்னும் பொருத்தமானது.


venugopal s
செப் 13, 2024 22:15

அப்படியே மணிப்பூர் மாநிலத்தின் பெயரையும் மாற்றி விட்டால் அங்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்! வாஸ்து படி அந்தப் பெயர் சரியில்லை என்று ஒரு ஜோசியர் சொன்னார்!


Vijay D Ratnam
செப் 13, 2024 22:13

அது போல வந்தேறிகள் சூட்டிய பெயரான ஹைதராபாத் என்ற பெயரை அகற்றி விட்டு, அதன் உண்மையான பெயரான பாக்யநகரம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் பாக்யநகரம் என்று அதன் ஒரிஜினல் பெயர் இருப்பதே நமக்கு பெருமை. அதுபோல இந்த தேசத்துக்கு சம்பந்தமே இல்லாத வந்தேறிகள் சூட்டிய பெயரான அஹமதாபாத் என்ற பெயரை அகற்றிவிட்டு கர்ணாவதி என்று குஜராத் தலைநகராக அதன் ஒரிஜினல் பெயரை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.


வாய்மையே வெல்லும்
செப் 13, 2024 22:05

ஹிந்துத்வ–வை திணிக்கிறது பாஜாக என ஒருவர் குரல் விடுவார் பாருங்க ... அவருக்கு ஹிந்துக்கள்னாலே அலர்ஜி .. பிற மத ஒட்டு பிச்சை தான் முக்கியம் என நினைப்பவர் அந்த அரசியல் பிரமுகர்.


Sahayaraj
செப் 13, 2024 21:38

இது தேவையற்ற வேலை


சமூக நல விரும்பி
செப் 13, 2024 20:59

இது தான் உண்மையான சமூக நீதி


M S RAGHUNATHAN
செப் 13, 2024 20:40

சோழ சாம்ராஜ்யத்தில் விஜயாலய சோழன் என்று ஒரு பிரசித்தி பெற்ற அரசர் இருந்தார்..ஆகவே விஜயபுரம் என்பது சரியே


முக்கிய வீடியோ