உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் கத்தி குத்து சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கத்தி குத்து சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 15 வயது மாணவர் இன்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜஸ்தானில் உதய்பூரின் பட்டியானி சோஹட்டா பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன் பள்ளியின் வெளியில், 10ம் வகுப்பு மாணவரை, அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.படுகாயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் கலவரமாக மாறியது. கார்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன. உதய்பூரில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு காலவரையரையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் நான்கு நாட்கள் சிகிச்சைபெற்று வந்த 15 வயது 10 ம் வகுப்பு மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subramanian
ஆக 20, 2024 07:35

மிகவும் சோகமான சம்பவம். பள்ளி் மாணவர்கள் இந்த மாதரி செயல்களில் ஈடுபடுவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


visu
ஆக 20, 2024 07:00

கொலை கற்பழிப்பு போன்ற கடுமையான குற்றங்களுக்கு வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஆக 19, 2024 22:58

ஆழ்ந்த அனுதாபங்கள்..... அதே சமயம் கொலையாழி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்..... இன்னும் சிறியவர்... பெரியவர்... என்று கதை பேசி கொண்டு இருக்க கூடாது......எப்போது கொலை செய்யும் அளவுக்கு வந்து விட்டானோ.... இன்னும் அவனை சிறுவன் என்று கூறுவதே தவறு.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ