உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 மாதங்களுக்கு மட்டும் சுமார் ரூ 829 கோடி ஊதியம்; ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வின் வேற லெவல் சம்பாத்தியம்!

4 மாதங்களுக்கு மட்டும் சுமார் ரூ 829 கோடி ஊதியம்; ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வின் வேற லெவல் சம்பாத்தியம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த செப்டம்பரில் ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வாக பணியில் இணைந்த பிரையன் நிக்கோல், 2024ம் ஆண்டு (பணி செய்த 4 மாதங்களுக்கு மட்டும்) சுமார் ரூ.829 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.அமெரிக்காவில் வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தேநீர், காபி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சி.இ.ஓ.,வாக, பிரையன் நிக்கோல் பணி அமர்த்தப்பட்டார். இவருக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் டாஸ்க் கொடுத்து இருந்தது.இவர் பொறுப்பேற்ற சில நாட்களில் நிறுவனம் விருப்பத்தின் படி வியாபாரம் கொடி கட்டி பறந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பரில் ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வாக பணியில் இணைந்த பிரையன் நிக்கோல், 2024ம் ஆண்டு (பணி செய்த 4 மாதங்களுக்கு மட்டும்) சுமார் ரூ.829 கோடி ஊதியம் பெற்றுள்ளார். இது போக கலிபோர்னியாவில் இருந்து ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகம் உள்ள சியாட்டல் வரை செல்ல நிக்கோலுக்கு தனி ஜெட் விமானம், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளையும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பொறுப்பு ஏற்றுள்ளது. பிற நிறுவன சி.இ.ஓ.,க்களான சுந்தர் பிச்சை, டிம் குக் ஊதியத்தை விட இது அதிகம். இதன் மூலம் அமெரிக்காவில் அதிகம் சம்பளம் பெறும் 20 சி.இ.ஓ.,க்களில் ஒருவராக பிரையன் நிக்கோல் மாறி சாதனை படைத்துள்ளார். பிரையன் நிக்கோல் ஒரு அமெரிக்க தொழிலதிபர். இவருக்கு வயது 51. இவர் லக்ஷ்மன் நரசிம்மனுக்குப் பதிலாக செப்டம்பர் 9, 2024ல் ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வாக பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஜன 27, 2025 23:49

இந்த சம்பளமே அவர் ஈட்டிய முதலீட்டிற்கு ரொம்ப கம்மி. திறமையானவர்களுக்கு அள்ளி கொடுத்து தான் ஒரு நல்ல நிறுவனம் முன்னேறமுடியும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 27, 2025 16:32

1980 களில் பிறந்தவர்களை பூமர் அங்கிள் என்கிறார்கள். ஆனால் இப்போதைய தலைமுறை தான் முட்டாள்களின் தலைமுறை. அறிவற்றவர்கள் அதிகம். 20 ரூபாய் காபியை 275 ரூபாய் க்கு பூமர் அங்கிள் தலைமுறை விற்கிறோம், ஜென் Z, next ஜென் என்று சொல்லிக்கொள்ளும் மூடர்கள் வெறும் காபிக்கு 275 முதல் 650 வரை வாங்குவதால் இவருக்கு இவ்வளவு சம்பளம். சூப்பர்


theruvasagan
ஜன 27, 2025 22:18

வைகுண்டர் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். ஜென்நெக்ஸ்ட் உருப்படிகள் சம்பாதிக்கிற பணம் பெரும்பாலும் ஊதாரித்தனமான செலவுகளிலேயே கரைந்து போகிறது. பணத்தை சம்பாதிப்பதைவிட அதை சரியானபடி செலவு பண்ணத்தான் திறமை வேண்டும். ஒரு சொல்வழக்கு உண்டு. எவ்ளவு சம்பாதிக்கிறோம் என்பது வருமானத்தை தீர்மானிப்பதில்லை. எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதுதான்.


வல்லவன்
ஜன 27, 2025 15:35

Starbucks இல் வேலை செய்போர்க்கு மிக மிக சொற்ப சம்பளம்.


Kasimani Baskaran
ஜன 27, 2025 14:15

பணத்தை அள்ளுவதால்தான் வெறும் காப்பி, டீ விற்கும் கடைகளை நிர்வகிப்பவருக்கு இவ்வளவு சம்பளம்...


புதிய வீடியோ