உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில காங்., அரசு திவால்; பா.ஜ., தலைவர் கிண்டல்

மாநில காங்., அரசு திவால்; பா.ஜ., தலைவர் கிண்டல்

பெங்களூரு; 'மாநில காங்கிரஸ் அரசு திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் விஜயேந்திரா குறிப்பிட்டு உள்ளதாவது:பால் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க மாநில காங்கிரஸ் அரசிடம் பணம் இல்லை. பால் பண்ணை, கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் விவசாயிகள் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை.பால் விவசாயிகளுக்கு இதுவரை வழங்க வேண்டிய 606.69 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறையே காரணம், என கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ், சட்டசபையில் தெரிவித்துள்ளார்.இது முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது கஜானாவை காலி செய்து, திவாலாக்கிவிட்டது என்பதை நிரூபித்துள்ளது.தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்ட பணத்தை, பிற நோக்கங்களுக்காக, பால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை பயன்படுத்தியதா என்று தெரியவில்லை.மக்கள் விரோத காங்கிரஸ் அரசு, மாநில மக்கள், விவசாயிகள் நலனுக்காக துளியளவு கூட மேம்பாட்டு பணிகளை செய்யாத அரசு, ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க தகுதியில்லை.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை