உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரண் அடைந்தால் மறுவாழ்வு: நக்சல்களுக்கு மாநில அரசு உறுதி

சரண் அடைந்தால் மறுவாழ்வு: நக்சல்களுக்கு மாநில அரசு உறுதி

சிக்கமகளூரு: மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் பதுங்கியுள்ள நக்சல்களை, நக்சல் தடுப்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர்கள் தானாக சரண் அடைந்தால், நல்ல முறையில் வாழ்வதற்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக மாநில அரசு உறுதி அளித்துள்ளது.சிக்கமகளூரு, கொப்பாவின் வனப்பகுதி கிராமங்களில் நக்சல்கள் நடமாடுவதாக தகவல் வெளியானது. அங்கு சென்று, நக்சல் தடுப்பு படையினர் விசாரித்தனர். சில வீடுகளுக்கு, நக்சல்கள் தலைவி வனஜாக்ஷி, லதா, சுந்தரி, ரவீந்திரா, ஜெயண்ணா வந்து சென்றது தெரிய வந்தது.எனவே மாவட்டம் முழுதும் அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.நக்சல்கள் பற்றி துப்புக் கொடுப்போருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக நக்சல் தடுப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் அவர்கள் ஐந்து பேரும், அடர்ந்த வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என, கருதப்படுகிறது. எனவே சிக்கமகளூரு மட்டுமின்றி தட்சிண கன்னடா, ஷிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களின் வனப்பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.இதற்கிடையே நக்சல் தலைவி வனஜாக்ஷி, உடல் நிலை பாதிப்பால் அவதிப்படுவதாக, மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. நக்சல்கள் தாங்களாகவே முன்வந்து சரண் அடைந்தால், சிறப்பு சலுகைகள் அளித்து, நல்ல முறையில் வாழ வழி செய்வதாக, அரசு உறுதிஅளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ