உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 33 கைதிகளை விடுவிக்க மாநில அரசு பரிந்துரை

33 கைதிகளை விடுவிக்க மாநில அரசு பரிந்துரை

விக்ரம்நகர்:டில்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தலைமையில் நடந்த தண்டனை மறுஆய்வு வாரியத்தின் கூட்டத்தில் 33 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாநில உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தலைமையில் எஸ்.ஆர்.பி., எனும் தண்டனை மறுஆய்வு வாரியத்தின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், சிறைத்துறை இயக்குனர் ஜெனரல், சட்டத்துறை முதன்மைச் செயலர், முதன்மை மாவட்ட நீதிபதி, காவல்துறை சிறப்பு ஆணையர், சமூக நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் மொத்தம் 205 குற்றவாளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சட்ட விதிகளின்படி, நன்னடத்தையின்படி, சிறையில் இருந்து 33 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்மொழிவு, துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனாவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !