உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குச்சந்தையில் ஏற்றம்; 2,000 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது சென்செக்ஸ்

பங்குச்சந்தையில் ஏற்றம்; 2,000 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது சென்செக்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் முதல்முறையாக ஏற்றம் கண்டுள்ளன.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் காணப்பட்டு வந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்றனர். இதனால், பங்குச்சந்தை வர்த்தகம் வந்த நிலையில் இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sdm7o98k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 2, 172 புள்ளிகள் அதிகரித்து 81,627 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 672 புள்ளிகள் அதிகரித்து 24,680 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்..எப்.சி.எல்.,எஸ்கார்ட்ஸ் குபோடா, இன்டர்குளோப் ஏவியஷன் லிமிடெட், எம்.சி.எக்ஸ்., இண்டியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !