உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்தினால் 76,500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்

ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்தினால் 76,500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு 76,500 கோடி ரூபாய் அதிகரிக்கக் கூடும் என எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், இது ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், அனைத்து நாடுகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி, மற்ற நாடுகளின் உற்பத்தியும் அதிகரிக்காதபட்சத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, பொதுத்துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் விகாஸ் கௌஷல், “ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தவோ அல்லது தொடர்ந்து மேற்கொள்ளவோ அரசிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு, தகுந்த முடிவெடுக்க, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்தம் 66.60 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தது. இதில் ரஷ்ய கச்சா எண்ணெய்யின் பங்கு 13.20 சதவீதம் மட்டுமே. இதற்கு புவிசார் அரசியல் சூழல் காரணம் கிடையாது.மாறாக, தள்ளுபடி குறைந்ததால் எடுக்கப்பட்ட பொருளாதார ரீதியான முடிவு தான் இது. மீண்டும் அதிக தள்ளுபடி வழங்கப்பட்டால், ரஷ்யாவிடம் இருந்து அதிகம் வாங்க தயாராக உள்ளோம்.அதே நேரத்தில், இதன் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றாலும், பெரிய பாதிப்பு இருக்காது.இவ்வாறு தெரிவித்தார்.

டிரம்ப் காரணமல்ல

இந்தியா, கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு எந்த ஆர்டரும் மேற்கொள்ளவில்லை. வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே கச்சா எண்ணெய் ஆர்டர் வழங்கப்பட்டு விடும் என்பதால், இதற்கு டிரம்ப்பின் வரி விதிப்பு காரணம் இல்லை என கூறப்படுகிறது. தள்ளுபடி குறைந்துள்ளதால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் பிற சந்தைகளை நோக்கி தங்களது பார்வையை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sasikumaren
ஆக 10, 2025 01:17

ஐரோப்பிய நாடுகளின் நெருக்கம் வேண்டாம் என்று உக்ரைனை ரஷ்யா வாய் மொழியாக எத்தனையோ முறை சொல்லி பார்த்து கெஞ்சி கூட பார்த்தது ஆனால் உக்ரைன் கேட்கவில்லை அதற்கு பிறகு ரஷ்யாயாவுக்கு புரிந்து விட்டது ரஷ்யா மீது ஏதோவொரு வன்முறை செய்ய நினைக்கிறார்கள் சொல் பேச்சு கேட்காத உக்ரைனை குறைந்த அளவு தாக்குதல் நடத்தி பார்த்தது சர்வாதிகார ஐரோப்பிய உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து ரஷ்யா தாக்க உதவி செய்தது பிறகு ரஷ்யா அதிக தாக்குதல் நடத்தியும் பார்த்தது இது இரண்டு நாட்டு பிரச்சினை உலக போராக மாற்ற ஐரோப்பிய நாடுகள் முயன்றது ஆனால் அது நடக்கவில்லை இப்போது அமெரிக்கா போர் நிறுத்த முயற்சி என்று சொல்லி கொண்டே உக்ரைனைக்கு ஆயுதங்களை சப்ளை செய்து கொண்டே அமைதி பேச்சுவார்த்தை என்று சொல்லி காலம் கடத்தி வந்தது பிறகு ரஷ்யாவின் மிகச்சிறந்த நட்பு நாடான இந்தியாவிடம் போரை நிறுத்த வேண்டும் கெஞ்சி பிறகு மிஞ்சி பார்க்கிறது இந்தியா பயந்த நடுங்கி ரஷ்யாவை மிரட்டி பார்க்கும் அதனால் நட்புறவு முறிந்து விடும் என்று கணக்கு போட்டது இந்தியாவுக்கு ரஷ்யா உக்ரைன் பிரச்சினை தலையிட வில்லை பிறகு வேண்டும் என்றே இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்க இப்போது அமெரிக்கா முயல்கிறது அது மட்டுமல்ல அமெரிக்கா ரசாயன பொருட்களை இந்திய வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய நினைத்து அதிலும் தோல்வி அடைந்தது அமெரிக்காவுக்கு கோபம் மட்டுமே பொங்கியது அதற்கு பாக் பிரச்சினையும் கையில் எடுத்து கொண்டது இதில் எதுவுமே நடக்கவில்லை அமெரிக்கா ஆயுதங்களின் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது இதை எல்லாம் அமெரிக்கா பெயரில் டிரம்ப் மாற்றி விட்டார் அவ்வளவு தான்.


Dorai Kausalya
ஆக 09, 2025 19:37

விலை கூட கொடுத்தாலும் திமிர் பிடித்த ட்ரம்ப்பிடம் வாங்க கூடாது.


Suresh Conjeevaram Doraibabu
ஆக 09, 2025 18:59

பைத்தியகாரன் கிட்ட மாட்டியது போல் இருக்கிறது.


Dv Nanru
ஆக 09, 2025 12:19

ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணையை ஏன் நிறுத்தவேண்டும் அமெரிக்காவுக்கு பயந்து எதையும் செய்யக்கூடாது அமெரிக்காக்காரன் ஆட்டிலும் ஊட்டுவான் குட்டியிலும் ஊட்டுவான் அதனாலே அமெரிக்காவை நம்பக்கூடாது நமக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர் கொடுத்துவிட்டு பாகிஸ்தானுக்கு அதைவிட அதிகமான மேம்படுத்தப்பட்ட ஹெலிகாப்டரை கொடுக்கிறாங்க அதனாலே அமெரிக்காவை நம்பவேண்டாம் ரஷ்யா தான் நம்முடைய ஆஸ்த்தான நம்பு நாடு அமெரிக்க ஒரு கட்ட பஞ்சாயத்து காரன் அவனுடைய நோக்கம் ஆயுதங்களை விற்கவேண்டும் ரெண்டுகளுக்கு இடையே சண்டையை முட்டிவிடவேண்டும் அப்பறம் சமரசத்துக்கு அமெரிக்கக்காரன் வருவான்,நாம அமெரிக்காவுக்கு செய்கின்ற ஏற்றுமதியை நிறுத்தினால் நஷ்டம் அவனுக்கு தான் உலக நாடுகள் எல்லோரும் அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதியை நிறுத்தினால் அங்கே பொருட்கள் தட்டுப்பாடு வரும் அதன் பிறகு வேலையில்லா திண்டாட்டம் வரும் அப்பறம் பஞ்சம் பசி பட்டினி. அமெரிக்காவில் பெரும் மந்தநிலை என்று சொல்லப்படும் பொருளாதாரப் பஞ்சம் 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை வீழ்ச்சியுடன் ஆரம்பித்த இந்த மந்தநிலை அமெரிக்காவை ஒரு பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது. இதைத் தொடர்ந்து, வேலையின்மை அதிகரித்தது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது, வறுமை பெருகியது, பொருளாதார வளர்ச்சி குறைந்தது. இந்த மந்தநிலை 1930 களின் பிற்பகுதி வரை நீடித்தது. இதை அமெரிக்கா மறந்ததாலும் உலகம் மறக்கவில்லை அதை அமெரிக்கா மறுக்கமுடியாது. பொருளாதார மந்தநிலை அமெரிக்காவில் பெரிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், நெருக்கடியை எதிர்த்துப் போராட போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பரவலாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் போல் இப்போது ட்ரம்ப் நிலைமையும் அப்படித்தான் இருக்கு. மீண்டும் 1929 மற்றும் 1930 ஆண்டுகளை மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டாம்.


c.k.sundar rao
ஆக 09, 2025 12:12

Stop purchasing oil from U S. and procure oil from countries which are against U S ,like Venezuela,Brazil and other countries who have good relationship with INDIA.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 09, 2025 10:06

ரஷ்யாவிடம் கச்சா என்னை வாங்குவதால் ஆண்டுக்கு 76,500 கோடி மிச்சம் என்பது தற்காலிகமானது என்றாலும் தவிர்க்க முடியாதது. அதே சமயம் உக்ரைன் போர் முடிவுக்கு வந்தவுடன் ரஷ்யா மீண்டும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் வாய்ப்புகள் அதிகம். எனவே நமக்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளுடன் எப்போதும் நட்புடன் இருப்பது அவசியம். கூடவே உள்நாட்டு உற்பத்தியில் கூடுதல் கவனம் தேவை. உதாரணத்திற்கு கோதாவரி, கிருஷ்ணா, காவிரி படுகைகளில் எண்ணெய் தேடுதல், உற்பத்தி பணிகளை ஊக்குவிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் திராவிட கட்சிகளை சட்டத்தின் மூலம் அடக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தால் இறக்குமதி தேவை குறையும், மீதமாகும் பணத்தை நாட்டை மேம்படுத்த பயன்படுத்தலாம். குறைந்த கட்டணத்தில் சர்வதேச தரத்தில் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கலாம். அதற்கு இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அடுத்த தலைமுறை பயன்பெறும்.


Sampath
ஆக 09, 2025 09:54

அமெரிக்க உடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கு மட்டும் வரி இழப்பீடு கொடுத்து ஒப்பந்தங்களை நிறைவு செய்யவும். மற்ற நிறுவனங்களுக்கு வேறு நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளை தேட ஊக்கிவிக்கவும். 12% ஏற்றுமதி சந்தையை மாற்று ஏற்பாடுகளின் மூலம் நாம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடு படலாம் விரைவாக


ஆரூர் ரங்
ஆக 09, 2025 09:22

சென்ற மாதம் மட்டும் மின்வாகனங்களின் விற்பனை 97 சதவீதம் கூடியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி தானாகவே குறையும். ஆனால் பெட்ரோல் விலையைக் குறைப்பது நல்லதல்ல. நுகர்வு அதிகரித்து அன்னியச் செலாவணி கரையும்.


Siva
ஆக 09, 2025 09:07

இதற்கு மறைமுகமான காரணம் சூரிய மின்சக்தி மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய மின்சார வாகனங்களை மக்கள் வாங்க வேண்டும் ஊக்குவிப்பது நோக்கம். கச்சா எண்ணெய் நம் நாட்டில் உற்பத்தி இல்லாததால் இதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய உள்ளது


Muralidharan raghavan
ஆக 09, 2025 10:57

இரு சக்கர வாகனங்கள், கார், நகரங்களில் ஓடும் பஸ்கள் ஆகியவற்றை பேட்டரியில் இயக்கலாம், ஆனால் லாரி ஜேசிபி போன்ற வாகனங்கள் டீசலில் மட்டுமே இயக்கமுடியும். மேலும் தார், மருந்து பொருட்கள் என பல்வேறு உற்பத்திகளுக்கு, கச்சா எண்ணெயைத்தான் நம்பவேண்டியுள்ளது.


Ganesh
ஆக 09, 2025 16:57

முரளிதரன் சார், யார் சொன்னது ஜேசிபி, டிரக் க்கு எலக்ட்ரிகல் வண்டி கண்டுபிடிக்க வில்லை என்று? 2024 - டெல்லி bauma எஸ்ஹிபிஷன் ல்ல வந்து விட்டது... ஆனாலும் எலக்ட்ரிகல் வண்டிகள் பேட்டரி எப்படி மறுசுழற்சி பண்ண முடியும் அது தான் பிரச்னை... ஆனால் அதற்கும் மோடி அரசு ஹைட்ரஜன் வண்டிகள் தயாரிக்க ஆரம்பிக்க செய்து விட்டது... ஆனால் ஹைட்ரோஜென் தயாரிப்பு இப்பொழுது கம்மி... அதனால் ஹைட்ரோஜென் தயாரிக்கும் ஆலைகள் கட்டும் வேலை 2024 யில் ஆரம்பித்து விட்டது பெரிய கம்பெனிகளால்.. வரும் ஜனவரியில் இருந்து ஹைட்ரோஜென் உற்பத்தி ஆரம்பித்து விட்டால் 2027 யில் நாலில் ஒரு பங்கும் 2028 யில் நாலில் மூன்று பங்கு பெட்ரோல் / டீசல் தேவை குறைந்து விடும்


பேசும் தமிழன்
ஆக 09, 2025 09:06

ஏன் ரஷ்யா நாட்டிடம் எண்ணெய் வாங்குவதைப் நிறுத்த வேண்டும் ?? அப்படி நிறுத்தினால் அதே விலையில் இவர்கள் எண்ணெய் தருவார்களா ???.... இத்தனைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் இன்றும் ரஷ்யா நாட்டுடன் வர்த்தகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் !!!!


புதிய வீடியோ