உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 22 நாட்களுக்குப் பிறகு நகர்த்தப்பட்ட பிரிட்டீஷ் போர் விமானம்; நிபுணர்கள் குழு ஆய்வு

22 நாட்களுக்குப் பிறகு நகர்த்தப்பட்ட பிரிட்டீஷ் போர் விமானம்; நிபுணர்கள் குழு ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கோளாறு காரணமாக 22 நாட்களாக நிறுத்தி வைக்கப்படிருந்த பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு நகர்த்தப்பட்டது. அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் இருந்து புறப்பட்ட எப்35 பி போர் விமானம், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, இந்திய விமானப்படையின் உதவியுடன் கடந்த 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. புறப்படுவதற்கு முன்பு செய்யப்பட்ட சோதனைகளின் போது, ஹைட்ராலிக் சிஸ்டம் பழுதடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ரூ.640 கோடி மதிப்புள்ள போர் விமானம், கடந்த மூன்று வாரங்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை.இந்நிலையில், பிரிட்டனில் இருந்து 25 நிபுணர்கள் கொண்ட குழு அட்லஸ் இசட்.எம்.417 ரக விமானத்தில் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தனர். இந்தக் குழுவினர் போர் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு நகர்த்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பிரிட்டீஷ் கடற்படை மறுப்பு தெரிவித்தது. தற்போது, அதற்கு ஒப்புக் கொண்டதால், 22 நாட்களுக்குப் பிறகு, எப்35 பி போர் விமானம், பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது. எப்35 பி போர் விமானத்தின் கோளாறை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அப்படி முடியாவிட்டால், எப்35 பி போர் விமானத்தை பகுதி பகுதியாக பிரித்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Christuraj
ஜூலை 11, 2025 21:49

அதை என்னால் சரி செய்ய முடியும் தொடர்பு கொள்ளவும்


கண்ணன்
ஜூலை 07, 2025 12:17

பகுதி பகுதியாகப் பிரித்து ஏன் எடுத்துச் செல்லவேண்டும்? அது காயலான் கடை சமாச்சாரமெனில் இங்கேயே பிரித்து பித்தளையோ பேரீச்சம் பழமா வாங்கிச் சாப்புட்டுவிட்டு ஊருக்குப் போகலாமே!


Easwar Moorthy
ஜூலை 07, 2025 07:23

"பார்ட் பார்ட்டாக பிரித்து" என்ன ஒரு தமிழ் ?


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 22:34

ஓ இந்த விமானம் நகர்த்துவதற்க்கு 22 நாட்கள் ஆகின்றன


Ramesh Sargam
ஜூலை 06, 2025 22:10

சென்னையில் மட்டும் இவ்வளவு நாட்கள் இந்த விமானம் நிற்கவைக்கப்பட்டிருந்தால்... பார்ட் பார்ட் ஆக நமது திமுக கழக கண்மணிகள் கெழட்டி விற்று டாஸ்மாக் சரக்கு அடித்து நிம்மதியாக தூக்கம் போட்டிருப்பார்கள்.


Raman
ஜூலை 06, 2025 22:50

Terrific


Senthoora
ஜூலை 07, 2025 07:10

அது உங்க பெங்களுர் மொடல், அதை நீங்க சொல்லி கொடுத்திருக்கலாமே.


Tetra
ஜூலை 06, 2025 21:25

நம்ம ஊர் பாய் கிட்டசொன்னாஒரே நாளில் பகுதி பகுதியாய் பிரித்து கொடுத்து விடுவார்கள்


V.Mohan
ஜூலை 06, 2025 19:24

F35B ஜெட் விமானம் அப்படி ஓன்னும் பெரிய அப்பா டக்கர் டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்ட ஃபைட்டர் ஜெட் அல்ல. இப்போது ஏவுகணைகளில் பயன்படுத்தும் டெக்னாலஜியே அதைவிட அதிகம். பேசாமல் இந்திய நாட்டு இஞ்சினீயர்களிடம் பழுது நீக்க யோசனை கேட்டிருக்கலாம். அமெரிக்காவிடம யோசனை கேட்டால், கடைசியில் இந்திய இஞ்சினீயர்கள் தான் அங்கேயும் வருவார்கள்..விதி யாரை விட்டது.??


பெரிய குத்தூசி
ஜூலை 06, 2025 18:55

திருவனந்தபுரம் விமான நிலையம் அருகிறேலே பிரமோஸ் ஏவுகணை நிலையம் உள்ளது. இங்கு இந்திய பாதுகாப்பு துறையின் இந்திய பெருங்கடலின் முக்கிய ராடார் மையம் உள்ளது. அதுபோல் தென், தென்மேற்கு, கிழக்கு பகுதிகளை பாதுகாக்கும் ஐயன் டோம் போன்ற வான்பாதுகாப்பு மாயம் இந்த பிரமோஸ் ஏவுகணை மையத்தில் கட்டுபாட்டு நிலையம் உள்ளது. பிரிட்டிஷ் போர் விமானம் 4 கிலோமீட்டருக்கு குறைவான தூரத்தில் உள்ள பிரமோஸ் ஏவுகணை ராடர் மையத்தை உளவு பார்க்க ரிமோட் மெஷினாக நிற்கவைக்கப்பட்டுள்ளதா? இதை நமது பாதுகாப்புத்துறை உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். தகுந்த நடவடிகை எடுத்திருப்பார்கள் என நம்புவோம். ஜைஹிந்த்


Thiyagarajan S
ஜூலை 06, 2025 19:16

இருக்கலாம்... ஆங்கிலேயர்களை நம்ப முடியாது........


ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 18:45

பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறினால் நம்மால் ஒரு குண்டூசி கூட தயார் செய்ய முடியாது என்றார் ஈர வெங்காயம்.. இப்போ நம்மைப் பிரித்தாண்ட நாட்டின் விமானத்தை நாம் நாட்டிலேயே பிரித்து எடுத்துச் செல்லும் சோகம்.


kgb
ஜூலை 06, 2025 18:43

கிகோஸ்ட் $100மில்லியன் = Rs860Crs


சமீபத்திய செய்தி