உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்

செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செபி தலைவர் மாதவி புரி பூஜ் மீது நேரம் வரும்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைத்தளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: செபி தலைவர் மாதவி புரி பூஜ் என்ன காரணத்திற்காக ஐ.சி.ஐ.சி.ஐ.,யிடம் இருந்து பணம் பெற்றார்? செபி அமைப்பு தலைவராக இருக்கும் போது அவர் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் எப்படி பங்குகளை வைத்திருக்க முடியும்? ஸ்டார்ட்அப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் பெற்றது ஏன்?என்ன பயத்தால் அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? மாதவி புரி பூஜ் அதானியின் பணத்தையும், மதிப்பையும், நற்பெயரையும் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், செபி தலைவரை யார், ஏன் பாதுகாக்கிறார்கள்? இது குறித்து விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் விசாரித்தோம். கேள்வியும் கேட்கிறோம். நேரம் வரும்போது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

முன்னதாக...!

ஏற்கனவே, செபி தலைவர் பார்லி குழு முன் விசாரணைக்கு ஆஜராக ஏன் தயங்குகிறார்? செபி தலைவரை பாதுகாக்கும் பின்னணியில் இருப்பது யார்? என ராகுல் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

M Ramachandran
அக் 30, 2024 16:48

அன்று நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தா மாகா கள்ளனால் மும்பையில் 32 ஸ்டாக் ப்ரொக்கர்ஸ் தொக்கு போட்டு இறந்தார்கள். தன இன கொழுந்து ஒரு பேமஸ் கப்பல் மந்தி ரி மகனும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க உதவிய கொடுங்கோலன்.


ஆரூர் ரங்
அக் 29, 2024 18:23

முதல் பங்குச்சந்தை ஊழல் முந்த்ரா ஊழல். ஹர்ஷத் மேத்தா மெகா ஊழல் கூட உங்கள் ஆட்சியில்தான் நடந்தது. அப்போது நிதி அமைச்சர் மன்மோகன் கூறியது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துக்கெல்லாம் கவலைப்பட்டு எனது உறக்கத்தை இழக்க மாட்டேன்/. அவர் விழிப்பதற்குள் பல்லாயிரம் நடுத்தர முதலீட்டாளர்கள் அனைத்தையும் இழந்தனர் . பலர் தற்கொலைகூட செய்து கொண்டார்கள். காங்கிரஸ்தான் இன்னும் திருந்தவேயில்லை.


Uuu
அக் 29, 2024 14:12

மொதல்ல நீ இன்னும் எத்தனை நாள் இந்தியா ல இருக்க போறேன் னு பாரு. அதா விட்டு


jayvee
அக் 29, 2024 14:02

பப்பு சொல்வதிலும் ஞாயம் இருக்கிறது.. கோச்சார் விவகாரமும் இப்படித்தான் வெளி வந்தது


M Ramachandran
அக் 29, 2024 13:57

அது நீ தடி ஊன்றி நடக்கும் கிழவனானாலும் நடைய் பெற போவதில்லை.


கடுகு
அக் 29, 2024 13:57

கைப்புள்ள கெளம்பிட்டான்...எத்தனை தல உருளப்போகுதோ!?


Rangarajan Cv
அக் 29, 2024 12:04

Baseless allegations. If he is confident he should file case with the help of battery of reputed lawyers in his party. Why he is shying away? Fear of being pulled up by the courts for baseless abuses.


Sivasankaran Kannan
அக் 29, 2024 12:01

இந்த கொள்ளை கூட்டத்தை 10 வருடம் ஒதுக்கி என்ன பயன்.. கரப்பான்கள் திரும்ப வரும் என்று நம்மை பயன்படுத்துகின்றன..


M Kannan
அக் 29, 2024 10:35

This Pappu and his sister should surrender all corrupted money to govt. and go for a employment for their survival. This will help to retrieve their corrupted mind.


Anand
அக் 29, 2024 10:27

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்தால் இந்த நாடு உருப்படும்.


புதிய வீடியோ