உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை வசதி வேண்டும் மோடிக்கு  மாணவி கடிதம்

சாலை வசதி வேண்டும் மோடிக்கு  மாணவி கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிக்கமகளூரு: 'மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்ல சிரமமாக உள்ளதால், சாலை அமைத்து தர வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு 8ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி உள்ளார்.கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், மலகர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சிந்துாரா, 13. இவர், லோக்நாத்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.தினமும் பள்ளிக்கு 4 கி.மீ., நடந்து சென்று வருகிறார். இவரது ஊரில் சாலைகள் இல்லாததால், மழைக்காலத்தில் சேறு, சகதியில் சிரமப்பட்டு பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.இதுகுறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிந்துாரா எழுதியுள்ள கடிதம்:எங்கள் கிராமத்தில் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலத்தின்போது, சேறு, சகதியுள்ள பாதைகளில் நடக்க முடிவதில்லை. பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சிரமப்படுகிறோம்.சாலை வசதி இல்லாததால், ஒரு வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிக்கு செல்கிறேன். இதனால், என் ஐ.ஏ.எஸ்., கனவு கலைந்து விடுமோ என்று பயமாக உள்ளது. அரசியல்வாதிகளிடம் பல முறை கூறியும் சாலை அமைத்து தரவில்லை. பிரதமராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூலை 17, 2025 10:02

உனக்கு ரோடு போட்டு குடுத்தா ஆளாளுக்கு ரோடு கேப்பாய்ங்களே. கட்டுப்படியாகுமா?


K.Uthirapathi
ஜூலை 17, 2025 09:46

ஐயா செய்தியை முழுமையாக வாசிக்க வேண்டும். உள்ளூர் அரசியல் வியாதிகளிடம் முறையிட்டும், பயனில்லை என்று. "சாமரத்தை சற்று, அக்கம் பக்கம் பார்த்து வீசவும்".


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:17

சித்தராமையா வெளிநாட்டு மதத்தினருக்கு அளிக்கும் ஆதரவை இந்த மாணவ கண்மணிகளுக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல் கூறுவானா ?


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 03:46

மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கோமாளிகளிடம் முறையிட்டு இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை