வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அஸ்தா பூனியாவுக்கு வாழ்த்துக்கள்.
Fantastic , Now they are shining everywhere
புதுடில்லி: இந்திய கடற்படையின் போர் விமானி பயிற்சிக்கு சப் லெப்டினன்ட் அஸ்தா பூனியா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் அவர், எதிர்காலத்தில் மிக் -29 கே மற்றும் கடற்படையின் ரபேல் போர் விமானங்களில் பறக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.கடந்த 2013 முதல் அதிநவீன ஜெட் போர் பயிற்சி விமானமான ஹாக் 132 மூலம் ராணுவ விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று நடந்த விழாவில், லெப்டின்ட் அதுல் குமார் துல் மற்றும் சப் லெப்டினன்ட் அஸ்தா பூனியா ஆகியோர், கடற்படையின் விமானப்படை பிரிவு தலைமை அதிகாரி ஜானக் பெவிலிடம் இருந்து ' Wings Of Gold' என்ற பாரம்பரியமிக்க விருதை பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் கடற்படையின் போர் விமானங்களை பயிற்சி பெற உள்ள முதல் பெண் என்ற பெருமையை அஸ்தா பூனியாவுக்கு கிடைத்து உள்ளது. இதன் மூலம், கடற்படையில் பெண் போர் விமானிகளுக்கான தடை நீங்குவதுடன் புதிய சகாப்தம் துவக்கப்பட உள்ளது என கடற்படை தெரிவித்து உள்ளது.ஏற்கனவே, கடலோர காவல்படை போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் பெண் அதிகாரிகளை கடற்படை ஈடுபடுத்தி வருகிறது.ஏராளமான நாடுகளை பெண்களை கடற்படை போர் விமானங்களை இயக்க அனுமதித்து வருகிறது. 1990 முதல் அமெரிக்கா கடற்படை போர் விமானங்களை பெண்கள் இயக்கி வருகிறது. பிரிட்டன் கடற்படையிலும் பெண்கள் போர் விமானிகளாக உள்ளனர்.
அஸ்தா பூனியாவுக்கு வாழ்த்துக்கள்.
Fantastic , Now they are shining everywhere