உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சார்ஜிங் நிலையத்தில் திடீர் தீ விபத்து

 சார்ஜிங் நிலையத்தில் திடீர் தீ விபத்து

புதுடில்லி: பேட்டரி சார்ஜிங் நிலையத்தில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேற்கு டில்லியின், ரகுபீர் நகர் பகுதியில், ஒரு கடையில் சார்ஜிங் நிலையம் செயல்பட்டு வந்தது. அங்கு நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்படையில், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. டில்லி தீயணைப்புத் துறை, டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் டில்லி காவல்துறை குழுக்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனாலும், தீ பற்றிய போது, அப்பகுதியில் கடும் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை