உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதாகர் வெளியே போகலாம்: பா.ஜ., விஸ்வநாத் ஆவேசம் 

சுதாகர் வெளியே போகலாம்: பா.ஜ., விஸ்வநாத் ஆவேசம் 

பெங்களூரு; ''பா.ஜ.,வில் இருந்து எம்.பி., சுதாகர் வெளியேறட்டும்,'' என்று, அக்கட்சியின் எலஹங்கா எம்.எல்.ஏ., விஸ்வநாத் ஆவேசமாக கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை பற்றி எங்கள் கட்சி எம்.பி., சுதாகர் பேசி இருப்பது, கட்சியில் யாருக்கும் பிடிக்கவில்லை. லோக்சபா தேர்தலில் என்னை தோற்கடிக்க விஸ்வநாத் முயன்றார் என்று சுதாகர் மறைமுகமாக பேசி உள்ளார். காங்கிரஸ் - ம.ஜ.த.,வில் இருந்து வந்த 17 பேரால் பா.ஜ., ஆட்சி அமைந்து இருக்கலாம். ஆனால் அந்த 17 பேரில் சுதாகர் தான் கடைசி நபர். விதான் சவுதாவில் அவரை காங்கிரசார் தாக்க முயன்ற போது, நான் தான் காப்பாற்றி அழைத்து வந்தேன். சுகாதார அமைச்சராக திறமையாக பணியாற்றினேன் என்று அவர் கூறுகிறார்.அப்படி இருந்தால் சட்டசபை தேர்தலில் தோற்றது ஏன். லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது என்ற மனநிலையில் அவர் இருந்த போது, காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார். இல்லை என்று சத்தியம் செய்ய தயாரா.உங்களுக்கு பலம் இருந்தால் எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுயேச்சையாக போட்டியிடுங்கள். என்னை பற்றியும், எனது தொகுதி தொண்டர்களை பற்றி பேசினால் அமைதியாக இருக்க மாட்டேன். லோக்சபா தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றது, பிரதமர் மோடியின் பெயரில் தான்; ம.ஜ.த., ஆதரவும் கிடைத்தது. இங்கு இருக்க விருப்பம் இருந்தால் இருங்கள். இல்லா விட்டால் கட்சியில் இருந்து வெளியேறுங்கள். கட்சி சுத்தம் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !