உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விற்றது சமோசா: படிப்பில் சமர்த்தா: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய மாணவன்

விற்றது சமோசா: படிப்பில் சமர்த்தா: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய மாணவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நொய்டா: உ.பி.,யை சேர்ந்த 18 வயது மாணவன், சாலை ஓரத்தில் சமோசா விற்று வந்ததுடன், கடினமாக படித்து நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளான்.மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இத்தேர்வுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் அல்லும் பகலும் கடினமாக படித்து வருகின்றனர். பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் நீட் தேர்ச்சி, சாலை ஓரத்தில் சமோசா விற்கும் 18 வயது சிறுவனுக்கு கிடைத்திருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வசிக்கும் சன்னி குமார் என்ற 18 வயது மாணவன், காலையில் பள்ளி சென்றுவிட்டு மாலை 4 மணி முதல் 9 மணி வரை சாலை ஓரத்தில் சமோசா, பிரெட் பக்கோடா போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றான். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியில் இருந்துகொண்டே நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளான். கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு எழுதி, 720க்கு 664 மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்றுள்ளான். இது பற்றி தெரிந்த இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடும் நபர் ஒருவர், சன்னி குமார் தேர்ச்சி பெற்றதை பகிர்ந்துள்ளார். அதன்மூலமே இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றி சன்னி குமார் கூறுகையில், ''எனது தந்தையிடம் இருந்து பொருளாதார ரீதியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சாலை ஓரத்தில் கடை வைத்து சமோசா, பிரெட் பக்கோடா விற்று வந்தேன். என் அம்மாதான் நன்றாக படித்து, வாழ்க்கையில் வேறு ஏதேனும் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் எனக் கூறி முழு ஆதரவளித்தார். தற்போது இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறேன்,'' என்றார். சன்னி குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Barakat Ali
ஆக 31, 2024 20:32

காரணம் உ பி யில் உ பி க்கள் போற்றும் திராவிடம் இல்லை ..... அதுதான் காரணம் .....


Somassoundara Poulle
ஆக 30, 2024 20:28

லட்சியம் மிக முக்கியம்


Easwar Kamal
ஆக 30, 2024 17:15

உத்தர மாநிலமா ? பய புள்ள குஜராத் இல்லையா ?


Ganesh Subbarao
செப் 02, 2024 13:24

அங்கே யோகி ஆட்சி


KRISHNAN R
ஆக 30, 2024 15:17

இங்குள்ள .....இங்கிகளுக்கு.... தெரியுமா... என்ன இவனும் கோப்பி அடித்தான் என்று கூறி அரசியல?


Kumar Kumzi
ஆக 30, 2024 14:38

ஏழை மாணவர்கள் படிப்பது எங்க விடியாத விடியலுக்கு அலர்ஜிக் தன்னை போலவே துண்டுசீட்டுக்களாகவும் வளரனும் கஞ்சாவுக்கும் டாஸ்மாக்கும் அடிமையாகி ஓவாவுக்கு ஒட்டு போடுற நிலைமையில் வைத்திருக்கணும் என்பது எங்க விடியலின் ஆசை


பசையப்பன் கேபால் புரம்
ஆக 30, 2024 13:38

ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு??


Duruvesan
ஆக 30, 2024 13:20

ஆக நீட் ஒழித்து விட்டு வேலு மற்றும் ஜெகத்து கல்லூரியில் எல்லோருக்கும் மருத்துவ படிப்பு இலவசம் என விடியல் சார் சத்தியம் செய்வார்


Duruvesan
ஆக 30, 2024 13:16

விடியலு நீட் ஒழிக்கும் வரை ஓய மாட்டார்


Shekar
ஆக 30, 2024 12:53

அதெல்லாம் முடியாது, முடியாது ஏழை கல்வி தந்தைகள் வயிற்றில் அடிப்பதை, ஸாரி கோடீஸ்வர ஏழை மாணவர்களை படிக்கசொல்லி வயிற்றில் அடிப்பதை நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம்


VIJAYALAKSHMI SOUNDARARAJ
ஆக 30, 2024 12:52

vazhthukkal


முக்கிய வீடியோ