உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடுருவலுக்கு ஆதரவு!

ஊடுருவலுக்கு ஆதரவு!

ஊடுருவலுக்கு ஆதரவு!

மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றன. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும், காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் இணைந்து, அவர்களை நாட்டிலேயே தங்க வைக்க செயல்படுகின்றனர். மேலும் பல ஊடுருவல்காரர்கள் நாட்டுக்குள் வர விரும்புகின்றனர்.- சுவேந்து அதிகாரிமேற்கு வங்க முதல்வர், பா.ஜ.,

பாரபட்சமான கவலை!

சுற்றுச்சூழல் மற்றும் ஒலி மாசு குறித்து கவலைப்படுவோர், அனைத்து மத விழாக்களிலும் ஒரே அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஹிந்து பண்டிகைகளின்போது மட்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசிவிட்டு, பிற மத விழாக்களின்போது மவுனமாக இருப்பது ஏன்? இத்தகைய பாரபட்சமான கவலைகள் இருக்கக்கூடாது.- கவுரவ் பாத்தியாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

பா.ஜ.,வில் இணைவர்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜ.,வின் உத்தரவுப்படி செயல்பட்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளது. அக்கட்சியின் மறைந்த தலைவர் அஜித் பவாருக்கு பின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவற்ற நிலையில் உள்ளது. உண்மையில் தேசியவாத காங்கிரஸ் சரத் பவாருக்கு சொந்தமானது.- சஞ்சய் ராவத்ராஜ்யசபா எம்.பி.,உத்தவ் சிவசேனா கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !