உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக்கு ஆதரவு: காங்கிரஸ் அறிவிப்பு

உ.பி., இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக்கு ஆதரவு: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள 9 சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.நவம்பர் 13ம் தேதி, உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள, கத்தேஹரி, கார்ஹல், மிராப்பூர், காஷியாபாத், மஜ்ஹவான், சிசாமாவ், காய்ர், புல்பர் மற்றும் கண்டர்க்கி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து, டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.இது குறித்து உ.பி.மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில்,அரசியல் சூழ்நிலை, பாதுகாப்பு காரணங்களுக்காக, உ.பி.,யில் காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது, இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிடும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார்.பொதுசெயலர் அவினாஸ் பாண்டே கூறுகையில்,காங்கிரஸ் மேலிட முக்கிய தலைவர்கள் மற்றும் உ.பி.மாநில தலைவர் அஜய் ராய் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து, இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ