குடியுரிமை ஆவணமாக ஆதாரை ஏற்க முடியாது தேர்தல் கமிஷன் வாதத்தை ஏற்றது சுப்ரீம் கோர்ட்
பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் நம்பகமான ஆவணமாக ஆதார் அடையாள அட்டையை ஏற்க முடியாது' என தெரிவித்து உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3m9p4ebg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மேலும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை ஒன்றாக இணைத்து விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், 'ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை ஆவணமாக ஏற்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்திருந்தது. மேலும், 'வாக்காளர் பட்டியலில் இருந்து மிகப்பெரிய அளவில் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கடந்த ஜூலை 29ம் தேதி, தேர்தல் கமிஷனை எச்சரித்திருந்தது. அதே சமயம், ஆதார், ரேஷன் அட்டை ஆகியவற்றை நம்பகமான ஆவணமாக ஏற்க முடியாது என உறுதிபட தெரிவித்த தேர்தல் கமிஷன், அதற்கான காரணத்தையும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கியிருந்தது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி வரைவு தொடர்ச்சி 6ம் பக்கம்
ஆதார், பான் இருந்தால் இந்தியரா?
ஆதாரை குடியுரிமைக்கான அடையாள ஆவணமாக ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில், மும்பை உயர் நீதிமன்றமும் இதே போன்ற ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த பாபு அப்துல் சர்தார் என்பவரை மும்பை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஆதார், பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை சமர்பித்து, இந்தியர் என நிரூபிக்க முயன்றார். விசாரணையில், அந்த ஆவணங்கள் அனைத்தும் மோசடி செய்து முறைகேடாக பெறப்பட்டவை என தெரியவந்ததால், அவருக்கு ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ஆதார், பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்திய குடிமகனாக்கிவிடாது. இந்த ஆவணங்கள் அடையாளம் காண அல்லது சேவைகளை பெற மட்டுமே. 1955ம் ஆண்டின் குடியுரிமை சட்டம், சட்டப்பூர்வ குடிமக்களுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையே இருக்கும் தெளிவான எல்லைக்கோட்டை வரையறுத்திருக்கிறது. இது, யார் இந்திய குடிமகனாக இருக்கலாம், எப்படி குடியுரிமையை பெறலாம், எந்த சூழலில் அதை இழக்க நேரிடலாம் என்பதை வகுக்கும் சட்டம். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -