உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுயபரிசோதனை செய்யுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

சுயபரிசோதனை செய்யுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சில ஐகோர்ட் நீதிபதிகள் சரியாக வேலை செய்யவில்லை. அவர்கள் தங்களது பணியை சுயபரிசோதனை செய்ய வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.குற்றவியல் வழக்குகளில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் தீர்ப்புகளை ஒத்திவைத்த போதும், அதனை வழங்கவில்லை எனக்கூறி ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வு கூறியதாவது: ஐகோர்ட் நீதிபதிகளுக்கு நாங்கள் பள்ளி முதல்வர்கள் போல் செயல்பட விரும்பவில்லை. ஆனால், ஆனால் கோப்புகள் மேசைகளில் குவிந்து கிடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு சுய மேலாண்மை அமைப்பு இருக்க வேண்டும்.பல நீதிபதிகள் இரவு பகல் பாராமல் பணியாற்றில வழக்குகளை விரைவாக முடித்து சிறப்பாக பணியாற்றுகின்றனர். அதே நேரம், சில நீதிபதிகள் துரதிர்ஷ்டவசமாக சிறப்பாக பணியாற்ற முடியவில்லை. அதற்கான காரணம் நல்லதாக இருக்கலாம் அல்லது கெட்டதாக இருக்கலாம் என்பது நமக்கு தெரியாது. அல்லது வேறு சூழ்நிலைகளாக இருக்கலாம்.ஒரு நீதிபதி கிரிமினல் அப்பீலை விசாரித்தால், நாங்கள் ஒரே நாளில் 50 வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு நாளில் ஒரு கிரிமினல் வழக்கை விசாரிப்பதே பெரிய சாதனை. ஆனால், பெயில் விஷயத்தில், ஒரு நாளில் ஒரு வழக்கை மட்டுமே பார்ப்பேன் என சொன்னால், அது குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும்.எங்களது நோக்கம் பள்ளி முதல்வர்கள் போல் செயல்படுவது கிடையாது. நீதிபதிகள் தங்களுக்கு முன் உள்ள பணி என்ன, எவ்வளவு பணியை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் பரந்த வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். நீதித்துறையிடம் பொது மக்களுக்கு ஒரு நியாயமான எதிர்பார்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Sampath
செப் 23, 2025 12:37

உச்ச நீதி மன்ற வழிகாட்டு முறையை பின்பற்றவும்.


JEE
செப் 23, 2025 11:50

ஊருக்கு தாண்டி உபதேசம் மாதிரி உள்ளது


NATARAJAN R
செப் 23, 2025 11:37

மற்ற நீதிமன்றங்களுக்கு அறிவுரை கூறுவது இருக்கட்டும். நீங்கள் எப்போது தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் எந்த தண்டனை உத்தரவு பிறப்பித்தாலும் திமுக சார்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜரானார் என்றால் அவர் கேட்ட உத்தரவு அப்படியே தந்து ஊழலுக்கு தண்டனை தருவதை தடை செய்து உத்தரவு பிறப்பிப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?


Muthukumaran
செப் 23, 2025 11:09

நீதித்துறையில் பொதுமக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது உண்மைதான்.மாநிலத்தில் உயர்நீதிமன்றங்கள் நிலை அறிந்து வழக்குகளை கையாள்வதை முறியடிக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்குகிறது. மக்கள் எதிர்பார்ப்புக்கு யார் முட்டுக்கட்டை. அரசியல் நோய் தன்னாட்சி பெற்ற துறைகளுக்கும் தொற்றிக்கொண்டு விட்டது. ஒரு முறை உ.நீ மன்றம் உயர் நீதி மன்றத்தை வீட மேன்மையானது என நாங்கள் கூறவில்லை என்ற கருத்து வெளியாகியது. பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எப்படி உருவாகும். கால நிர்ணயம் வழக்குக்கும் அறிவிக்காதவரை இந்நிலை தொடரத்தான் செய்யும்.


R.Varadarajan
செப் 23, 2025 10:49

இவர்களுக்குமா வழக்கமாக வாரி வழங்கும் அறிவுரை?


அப்பாவி
செப் 23, 2025 07:25

ஆமாம். சுப்ரிம் கோர்ட் ஆளுங்க செவ்வா கிரகத்திலிருந்து வந்த உத்தமர்கள். சுய பரிசோதனை அவிங்களுக்கு தேவையில்லை.


Kalyanasundaram R
செப் 23, 2025 06:37

வழக்குகள் குவிய காரணம் நீதிமன்றத்தின் குறைபாடுள்ள சட்டங்கள்.


Iyer
செப் 23, 2025 06:14

5000 திருடிய PICKPOCKET - பொதுமக்களிடமோ அல்லது POLICE டமோ சிக்கினால் அவன் கதி என்ன ஆகும் என்று எல்லோரும் அறிவர் 5000 கோடி கொள்ளை அடித்த - தாயும் சேயுக்கும் - எதிராக Dr. Swamy ஆதாரங்களுடன் புகார் அளித்து 12 வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு தண்டனை வழங்க துப்பில்லாத SC யை திருத்த நடவடிக்கை தேவை.


Iyer
செப் 23, 2025 06:08

பல்லாயிரம் கோடி கள்ளப்பணம் கிடைத்ததை ஏன் வெளியிடாமல் மறைக்க முயற்சி செய்தது?


Iyer
செப் 23, 2025 06:04

ஸ்ரீ லங்காவில் = கோர்ட் ஆர்டர் கொடுத்தபின்தான் கலகம் மூட்டி வன்முறை தொடங்கியது பங்களாதேஷிலும் = கோர்ட் ஆர்டர் கொடுத்தபின்தான் கலகம் மூட்டி வன்முறை தொடங்கியது நேபாளத்தில் கோர்ட் ஆர்டர் கொடுத்தபின்தான் கலகம் மூட்டி வன்முறை தொடங்கியது அரசுகளை கவிழ்த்து - தனக்கு சாதகமான அரசுகளை அமைப்பது அமெரிக்காவின் சதிவேலை இந்தியாவிலும் ""அமெரிக்கா - கைக்கூலி - நீதிபதிகள்"" - பலர் உள்ளனர். VOTE-CHORI என்று - SIR க்கு எதிராக வழக்கு தொடர்ந்து இந்திய அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி செய்தது ஆனால் மோதி போன்ற ஒரு பிரபலமான தலைவருக்கு எதிராக ஊழல் நீதிபதிகள் பயந்து விட்டனர்.


Mahendran Puru
செப் 23, 2025 07:01

மனசு விட்டு சிரிக்க கமெண்ட் படிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை