உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக அரசுடன் கவர்னர் பேச வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

தமிழக அரசுடன் கவர்னர் பேச வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: '' இன்னும் 24 மணிநேரம் உள்ளதால், அரசியலமைப்பின்படி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கு கவர்னர் தடையாக இருப்பதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில், 'மசோதா குறித்து முன்பே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எதுவும் நிலுவையில் இல்லை. துணைவேந்தர் நியமனத்தில் எதிர்தரப்பாக யு.ஜி.சி., சேர்க்கப்படாததால் விளக்கம் தர இயலாது', என விளக்கம் அளிக்கப்பட்டது.தமிழகஅரசு சார்பில் வாதாடுகையில், திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றினால் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். 2020 ஜன.,13 முதல் ஏப்.,2023 வரை 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் 2ஐ ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பினார். கவர்னரின் செயல்பாடுகளால் தமிழக அரசின் நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுகிறது. கவர்னர், சூப்பர் முதல்வராக செயலாற்ற முடியாது. ஒரே உரையில் இரு கத்திகள் இருக்க முடியாது. பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்கள் தொடர்புடைய மசோதாக்கள் மட்டுமே ஜனாதிபதியின் பரிசீலனைக்கு கவர்னர் அனுப்ப முடியும். அரசியலமைப்பிற்கு கவர்னர் உட்பட்டவர் தான். ஆனால், அவர் அப்படி செயல்படவில்லை. பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்காத காரணத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. துணைவேந்தர் விவகாரத்தில் மாநில அரசை கவர்னர் பழிவாங்குகிறார். தண்டனை நிறுத்திவைக்கப்பட்டவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்தார். கோர்ட் கண்டித்த நிலையில், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அரசியலமைப்பு விதி 200ன் படி கவர்னர் செயல்பட வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக்கூறப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? கவர்னர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக்கூடாது. ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிவைத்த மசோதாக்கள் எவை. இதன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன இம்மசோதாக்கள் மீது கவர்னரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை. எதன் அடிப்படையில், மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். கவர்னர் - அரசு மோதலால், மாநிலமும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். 24மணி நேரத்தில் தமிழக அரசுடன் பேசி முடிவெடுக்கவேண்டும். தமிழக அரசை தேநீர் விருந்துக்கு அழைத்து கவர்னர் பேசலாம். எதன் அடிப்படையில் கவர்னர் எப்படி முடிவு எடுக்கிறார் எனக்கூற வேண்டும்.இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு விதிகளை உறுதி செய்வோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து விசாரணையை நாளை மறுநாள்( பிப்.,6) ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 94 )

SIVA
பிப் 08, 2025 15:20

செந்தில் பாலாஜி உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்ய பட்ட போது அந்த வழக்கு நடந்த விதம் தவறு என்று சொன்னது , இன்று அவர் மந்திரியாக உள்ளார் , அது சம்பந்தமாக வழக்கு வந்த போதும் அது பற்றி தெளிவாக கூற வில்லை ......


madhes
பிப் 07, 2025 14:57

பாவம் ரவி


K V Ramadoss
பிப் 06, 2025 03:55

உச்ச நீதி மன்றம் என் மாநில அரசுக்கு பயப்படுகிறது ?


Ravichandran S
பிப் 05, 2025 20:17

வரவர நீதிமன்றங்கள் மேல் சாமானிய மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. முன்னர் ஒருவர் பதிவிட்டது போல் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வந்தவர் அமைச்சரானதை கேள்விகேட்க உச்ச நீதிமன்றத்தால் முடியவில்லை. தமிழக ஆளுனர் , பிரதமர், மத்திய அரசை நன்றாக கேள்வி கேட்டு உத்தரவு கொடுக்கிறது.உச்சநீதிமன்றம் உண்மையிலேயே நடுநிலையாக இருக்கிறது என்றால் தமிழக அரசு தேசியகீதத்தை சட்டமன்றத்தில் கவர்னர் இருக்கும் சமயத்தில் இசைக்காததிற்கு தானாகவே முன்வந்து தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்


r.srinivasan
பிப் 05, 2025 19:00

திருடன் என்று நம்பப்பட்ட ஒருவனை அமைச்சர் ஆக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது


Murugesan.P
பிப் 05, 2025 12:07

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்கு விரோதமாக செயல்படும்போது ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் தண்டனை வழங்குவதும் ஒரு கவர்னருக்கு உரித்தான அதிகாரங்கள் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஒன்று ஆளுநர் மற்றொன்று முதல்வர் .......கடிவாளம் ஒன்று இருந்தால் மட்டுமே குதிரை நன்றாக ஓடும்


Velan Iyengaar
பிப் 05, 2025 12:27

என்னாது ?? தண்டனை கெவுனரு வழங்குவாரா?? எங்கே கீதுபா அந்த அதிகாரம் அந்த அரைவேக்காடுக்கு ??


Ray
பிப் 07, 2025 19:37

கழுதையும் கவிபாடுது.இந்தமாதிரி அரைகுறைகள் தான் ஆபத்தானவை என்று காலங்காலமாக சொல்லி வருகிறார்கள்...


Arumugam Kalaichelvan
பிப் 05, 2025 11:09

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு விரோதமாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது


ஆரூர் ரங்
பிப் 05, 2025 12:08

கவர்னர் சம்பளம் மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்துதான் அளிக்கப்படுகிறது.


ameen
பிப் 05, 2025 14:53

சம்பளம் மட்டுமா? டீ பார்ட்டி செலவு, ஊட்டியில் ஓய்வு எடுக்கும் செலவு என அனைத்தும் மாநில மக்களின் வரிபணத்தில் தான் நடக்குது....


Velan Iyengaar
பிப் 05, 2025 16:17

ஊட்டி அரசு மாளிகையில் மகளின் ஓசி திருமணமும் அடங்கும் ... செலவு கணக்கில் ....


Arumugam Kalaichelvan
பிப் 05, 2025 11:07

முதல்வரின் கட்டளைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். இல்லாவிட்டால் கவர்னரின் ஊதியத்தை முதல்வர் நிறுத்த வேண்டும்


Mohan Loganathan
பிப் 05, 2025 10:11

ஆளுநர் தான் அரசின் தலைவர் அவர் அமைச்சரவை சொல்படி செயல் பட வேண்டும் அவருக்கு துணை வேந்தர்கள் நியமனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரில் ஒருவரை தன்னிச்சையாக நியமிக்கலாம் சட்ட மன்றம் இயற்றிய சட்டத்தில் உடன்பாடு இல்லை எனில் திருப்பி அனுப்பலாம் மீண்டும் அதே வந்தால் அங்கீகரிக்க வேண்டும்.. இதில் அரசியலுக்கு இடமில்லை


sankar
பிப் 05, 2025 10:10

கவர்னரின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டு சட்டசபை கலைக்கப்பட வேண்டும்.


ameen
பிப் 05, 2025 14:55

அந்த மாதிரி எல்லாம் இஷடத்திற்கு ஆட முடியாது....மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை தன்னிச்சையாக எல்லாம் இப்போ கலைக்க முடியாது...அதற்கான 306 சட்டபிரிவு நீக்கம் பட்டுவிட்டது....


Velan Iyengaar
பிப் 05, 2025 16:18

உண்மையான ஆண்மகனாக இருந்தால் ஆட்சியை கலைத்துவிடேன் .... உடனடியாக களைத்து பாரு .... நீ ஹான் 56 இஞ்சுக்காரனாயிற்றே ... கலைத்து பாரு ....


புதிய வீடியோ