உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரித்த அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமின் பெற்ற அடுத்த நாளே அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q6p80z66&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றதால், சாட்சியம் அளிக்க எவரும் வரவில்லை என புகார் எழுந்தது. அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறையும், மோசடியில் பாதிக்கப்பட்டோரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வேண்டுமா? என்பதை 28ம் தேதிக்குள் முடிவு எடுத்து தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். தனக்கு ஜாமின் தான் முக்கியம் என்று கருதிய செந்தில்பாலாஜி நேற்றிரவு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.இந்நிலையில், அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ், அபய் ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ''அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில்பாலாஜி அமைச்சராக கூடாது. டில்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பு ஏற்க கூடாது '' என்று வாதிட்டனர். இதற்கு, 'மீண்டும் அமைச்சராக முடியாது என சுப்ரீம்கோர்ட் கூற அதிகாரம் இல்லை' என செந்தில்பாலாஜி தரப்பு வாதிட்டது. பின்னர் நீதிபதிகள், ''மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமினை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்யலாம்'' என தெரிவித்தனர்.இதையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தாமரை மலர்கிறது
ஏப் 29, 2025 00:19

பத்து ரூவா பாலாஜியின் அரசியல் அஸ்தமனம் ஆகிறது. திமுகவில் இருந்துகொண்டு மீண்டும் ஜெயிக்க வாய்ப்பே இல்லை. இனி கேசில் இருந்து தப்பிக்க, மீண்டும் அமைச்சர் ஆக, செந்தில் பாலாஜி அதிமுகவிற்கு திரும்ப தாவுவார் என்பதில் சந்தேகமில்லை. ஊழல் செய்து மக்களை திரட்டி பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கக்கூடிய கைத்தேர்ந்த நிர்வாகி.


KavikumarRam
ஏப் 28, 2025 22:11

உச்ச நீதிமன்றம் வரவர மிகவும் பாகுபாட்டோடு நடந்து கொள்கிறது. ஒரு சாமானியனுக்கு இத்தகைய சலுகைகள் கிடைக்குமா என்ன??? இதில் நீதிபதிகள் வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் வேறு. தண்டனை என்னடான்னா இடம் மாற்றமாம். விளங்கும்.


துர்வேஷ் சகாதேவன்
ஏப் 28, 2025 22:54

உங்க செல்வி அம்மா ஜெயா ACCCUST 1 முதல் குற்றவாளி என்று தீர்ப்பு பெற்றவர் ,18 வருடம் குற்றம் சாட்ட பட்டு முதல்வர் ஆகவே தொடர்ந்தவர் , அவருக்கு அப்போ என் சலுகையோ=I


Keshavan.J
ஏப் 28, 2025 18:06

உண்மையில் சட்டம் ஒரு இருட்டறை தான். என்ன கேவலமமான நிலைமை. அவர் தான் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்தார். அப்போ தவறு நடந்து இருக்கு. ஏன் சட்டம் இதனை நாளா அவரை தண்டிக்க வில்லை


sankaranarayanan
ஏப் 28, 2025 17:29

இது திராவிட மாடல் அரசின் ஊழலுக்கு கிடைத்த முதல் வெற்றி இதை தொடர்ந்து இன்னும் 13- அல்லது 14-பேர்கள் அமைச்சர்கள் வரிசையில் இதே கதிக்கு தயாராக வெளியேற உள்ளார்கள் யார் யாரை முந்திக்கொண்டு வெளியே போவார்கள் என்று இப்போது கூறமுடியாது எல்லாமே நீதிமன்ற பார்வைக்கு உட்பட்டு அவர்களது சட்ட பார்வையில்தான் உள்ளது


V RAMASWAMY
ஏப் 28, 2025 17:18

எவரையும் குறை கூறாமல், வாக்களித்த தமிழக வாக்காளர்களை சொல்லுங்கள், லஞ்சப்பணம் ஆயிரத்திற்கும், பிரியாணி, மதுவிற்கு ஆசைப்பட்டு போதையில் வாக்களித்து தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைத்துவிட்டார்கள், அய்யகோ, இவர்களை என்ன சொல்வது, என்ன செய்வது.


Barakat Ali
ஏப் 28, 2025 17:01

அமீச்சர் ஆகி பல மாசம் சம்பளம் வேற வாங்கிட்டாப்டி ..... மக்களின் வரிப்பணம் ..... இதுக்கு ஏதாச்சும் சொல்யூஷன் இருக்குதா ????


பாமரன்
ஏப் 28, 2025 16:49

சரி சரி... சீக்கிரம் ஏணி கடப்பாரைல்லாம் குடுத்து சீபிபிபிய சுவறேரி குதித்து ரெய்டு பண்ண அனுப்புங்க... அப்பிடியே ஈடி கைல கருக்கருவாவையும் குடுக்க மறந்துடாதீங்க... கேசுல அறுத்து தள்ளி தண்டனை வாங்கி குடுக்னும்ல...


M R Radha
ஏப் 28, 2025 20:37

அந்த ரயில்வே அதிகாரி ஒழுங்காக தன்னுடைய கடமையை செய்திருந்தால் இப்பிரச்சனையே வந்திருக்காது


lana
ஏப் 28, 2025 16:41

ஐயோ மீண்டும் மீண்டுமா. பரவாயில்லை இந்த விளையாட்டு நல்லா இருக்கே. நாளைக்கே மீண்டும் அமைச்சர் பதவி. மீண்டும் ஒரு வழக்கு. அதுக்கு ஒரு 6 மாசம். அப்புறம் ஒரு ராஜினாமா நாடகம். பிறகு முதலில் இருந்து படிக்கவும். ஒரு பக்கம் வக்கீல் வலுவான ஃபீஸ். இங்கு தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஃபீஸ். எவன் அப்பன் வீட்டு பணம். திராவிட மாடல் க்கு காசு தானே முக்கியம். இப்போது தான் புரிந்து கொள்ள முடிகிறது. உச்சநீதிமன்றம் க்கு கொஞ்சம் கூட ஒரு ..... கிடையாது. அதுவே கவர்னர் க்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Narayanan
ஏப் 28, 2025 16:34

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும். அதுபோலவே உச்சநீதிமன்றமும் திறக்கிறதே . ஒரு சாதாரண எம் எல் ஏ அமைச்சராவைதை நீதிமன்றம் தடுக்க முடியாதாம் . ஆனால் நாட்டின் குடியரசு தலைவருக்கு உத்திரவு போடுமாம் . குடியரசுத்தலைவரின் பிரநிதிக்கும்ஆளுநர் உத்திரவு போடுமாம் வேடிக்கையாக இயங்குகிறது உச்சநீதிமன்றம் .


Narayanan
ஏப் 28, 2025 16:28

நாம் எந்த மாதிரியான நீதிபரிபாலயத்தின் கீழ் இருக்கிறோம் என்று பாருங்கள் . அது எப்படி வழக்கை முடித்துவைப்பார்கள் ? அப்போ அவர் செய்த குற்றம் இதன் மூலம் சரி என்கிறார்களா ?குற்றத்திற்கு நீதி வழங்க முடியாத உச்சநீதிமன்றம் எதற்கு ?வெட்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை