தெருநாய்கள் விவகாரம்: அரசு செயல்பாடு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அரசின் செயலற்ற தன்மையால் தெருநாய்கள் பிரச்னை ஏற்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் 3 நீதிபதிகள் அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cigt02ua&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரு தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்புகள் கிளம்பியது.இந்த சூழலில், இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அமைத்தார். அதன்படி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 14) விசாரித்தது.அப்போது டில்லி அரசின் சார்பாக ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நாய் கடிக்கு பிறகு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது.கருத்தடை சிகிச்சை செய்தாலும் ரேபிஸ் தொற்று பரவலை தடுக்க முடியாது. நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் அது குழந்தைகளை கடிப்பதை தடுக்க முடியாது. 2024ம் ஆண்டில் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.அனைத்து தரப்பினர் வாதங்களை கேட்ட பிறகு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள், அரசின் செயலற்ற தன்மையால் தெருநாய்கள் பிரச்னை ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, நெருநாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான விவாதங்களை முன்வைக்காதீர்கள் என விலங்கு ஆர்வலர்களிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.