உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 65 லட்சம் வாக்காளர் நீக்கம்: விபரம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீஹாரில் 65 லட்சம் வாக்காளர் நீக்கம்: விபரம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீஹாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தலைமையில், தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி கடந்த ஒரு மாதமாக அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்தன. விபரம் வெளியிடுங்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் என அந்த பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 1ம் தேதி அன்று, வரைவு வாக்காளர் பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசுசாரா அமைப்பு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் கமிஷன் வெளியிட உத்தரவிடக்கோரியது. மேலும், உயிரிழந்தவர்கள் எத்தனை பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளிட்டவிபரங்களையும் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.ஜி.ஓ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணிடம், 'தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது. 'உரிய நேரத்தில் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் கமிஷன் வெளியிடும்' என நீதிபதிகள் தெரிவித்தனர். ''சில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலில், பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம் உயிரிழப்பா அல்லது நிரந்தர இடப்பெயர்வா என்ற தெளிவான விளக்கம் இல்லை,'' என வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதாடினார். மேலும், 75 சதவீத வாக்காளர்கள் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த 11 ஆவணங்களில் ஒன்றை கூட வழங்கவில்லை என்றும், அவர்களது பெயர்கள் அனைத்தும் பூத் அலுவலரின் பரிந்துரையின் பேரிலேயே சேர்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார். பதில் மனு இதை குறித்துக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒவ்வொரு வாக்காளரும் பாதிக்கப்படலாம் என தோன்றுகிறது. எனவே, உரிய தகவல் தேவை. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வரும் 9ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதை வழக்கறிஞர் பூஷணும் பார்க்கட்டும். அப்போது எது மறைக்கப்பட்டது, எது மறைக்கப்படவில்லை என்பதை முடிவு செய்யலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Swaminathan L
ஆக 07, 2025 09:21

அறுபத்தைந்து இலட்சம் வாக்காளர்கள் நீக்கியது தொடர்பாக காரணங்கள் வாரியாக புள்ளிவிபரங்கள், எண்ணிக்கை விபரங்கள் தந்தால் போதுமா அல்லது மொத்த அறுபத்தைந்து இலட்சம் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட விபரங்கள் அனைத்தையும் நீக்குதல் காரணங்களோடு அச்சடித்துத் தர வேண்டுமா? ஒவ்வொரு வாக்காளரும் பாதிக்கப்படும் வாய்ப்பு தவிர்க்க வேண்டுமானால் பின் சொன்னபடி செய்வதே சரி. பிரசாந்த் பூஷணும் எல்லா விபரங்களையும் சரி பார்த்து பதில் தருவதே சரி.


GMM
ஆக 07, 2025 08:53

75 சதவீத வாக்காளர்கள் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த 11 ஆவணங்களில் ஒன்றை கூட வழங்கவில்லை என்றும், அவர்களது பெயர்கள் அனைத்தும் பூத் அலுவலரின் பரிந்துரையின் பேரிலேயே சேர்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இதனை ஆதார படுத்த வேண்டும். அதன் பின் தான் நீதிபதி விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் பாதிக்கப்படலாம் என்று எதன் அடிப்படையில் தோன்றுகிறது? உரிய தகவல் தேவை என்றால், முதலில் தகவல் ஆணையம் மூலம் பெறலாம். 100 சதவீதம் நேர்மையான அதிகாரிகள் எப்போதும் இருக்க முடியாது. நீதிபதி முடிவு இரு வழக்கறிஞர்கள் குழப்ப வாதத்தில் தீர்வு காண்பது பாதிக்கும். சட்ட விதிகள் படி தற்போது விவாதம் குறைவு?


GMM
ஆக 07, 2025 08:41

உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய அமைப்பை ஒரு மரத்தடி பஞ்சாயத்து போல் கையாள்கிறது. முதலில் ஒரு அரசியல் சாசன அமைப்பை இன்னொரு சாசன நீதிமன்றம் ஜனாதிபதி அனுமதி இல்லாமல் விசாரிக்க கூடாது? அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட பீகார் வாக்காளர் வரைவு பட்டியலில், பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம் உயிரிழப்பா அல்லது நிரந்தர இடப்பெயர்வா என்ற தெளிவான விளக்கம் இல்லை என்றால் அதனை குறிப்பிட்டு பூத் அலுவலர்/மாநில தேர்தல் ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஜனநாய சீர்திருத்த சங்கு உச்ச நீதிமன்றம் கீழ் யாருடனும் பேச மாட்டார்கள்.? முன்பு போல் ஒரு தேர்தல் ஆணையர் தேவை பற்றி வழக்கு போடலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 07:34

பாஜகவின் எதிர்க்கட்சிகள் போடும் காலத்துக்கேற்ப ஆடுவது உச்சத்தின் ஒரு கடமையாக உச்சமே கருதுகிறதோ


D Natarajan
ஆக 07, 2025 06:23

பிரஷாந்த் பூஷன் , கபில் சிபல் , முகுல் ரோதஹி, அபிஷேக் சிங்க்வி, ப சிதம்பரம் இவர்கள் நாட்டுக்கு சாபக்கேடு. இவர்கள் ஒழிந்தால் தான் நாட்டுக்கு நல்லது நடக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 07, 2025 09:10

உண்டு வீட்டிற்கு இரண்டகம் நினைப்பவர்கள். அரசு சம்பளத்தில் கொழுத்து போய் விட்டு இப்போது காசுக்காக ...


Kasimani Baskaran
ஆக 07, 2025 03:47

தமிழகத்திலும் இது போல வங்கதேசத்தவர்களின் வாக்குரிமை நீக்கப்பட வேண்டும்.


Iyer
ஆக 07, 2025 03:40

பீஹாரிகள் பாரத நாட்டை சேர்ந்தவர்கள். பீஹாரிகளுக்கு ஓட்டுரிமை கொடுக்கவேண்டும் அல்லது கூடாது - என்ற முடிவு எடுக்க DMK க்கு என்ன உரிமை? தமிழ்நாட்டில் வேலைசெய்யும் எந்த பாரதவாசிக்கும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை உண்டு


Iyer
ஆக 07, 2025 03:33

சுப்ரீம் கோர்ட் தன் வேலைகளை ஒழுங்காக செய்வதில்லை. ஆனால் மற்றொரு Constitutional Institution ஆன Election Commission விஷயங்களில் அதிகாரம் இல்லாமல் தலை இடுகிறது EC என்ற ஸ்தாபனம் SC க்கு உட்பட்டது அல்ல. SC ஊழல் நிறைந்த ஸ்தாபனம் ஆகியதுடன் - மமதை பிடித்த போக்குடன் செயல்பட்டு வருகிறது


Mohan
ஆக 07, 2025 10:22

அதை மத்திய அரசாங்கம் தான் செய்ய வேண்டும். இல்லை ஜனாதிபதி கேக்க வேண்டும் ரெண்டு பெரும் கம்முனு இருந்தா ஏன் பங்களாதேஷ் காரணிகளும் ஒரு காலத்துல நம்ம கூடத்தான் இருந்தாங்க ..அவுங்களும் வோட் போட உரிமை குடுக்க கூடாதுன்னு உச்ச நீதிமன்றம் கேக்க கூட வாய்பிருக்குது ...ஆனா முதுகெலும்பில்லாத மத்திய அரசாங்கம் ...