உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபாச படங்களுக்கு தடை விதித்தால் கொந்தளிப்பு ஏற்படும்; நேபாள வன்முறையை சுட்டிக்காட்டியது சுப்ரீம் கோர்ட்

ஆபாச படங்களுக்கு தடை விதித்தால் கொந்தளிப்பு ஏற்படும்; நேபாள வன்முறையை சுட்டிக்காட்டியது சுப்ரீம் கோர்ட்

ஆபாச படங்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 'ஒரு தடையால் நேபாளத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியும் அல்லவா' என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனினும், நான்கு வாரங்களுக்குப் பின் மனு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன், ஆபாச படங்களுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்: ஆபாச படங்களை வயது வந்தோர் மட்டும் காணும் வகையில் மத்திய அரசு ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். கட்டுப்பாடு வயது வித்தியாசம் இல்லாமல் இணையதளங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஆபாச படங்கள் எளிதாக கிடைக்கின்றன. தவிர, 13 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினர் மனதில் ஆபாச படங்கள் தீமையான எண்ணங்களை விதைக்கின்றன. இதனால், தனிநபரும், சமூகமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, வயது குறைந்தவர்கள் ஆபாச படங்களை காண தடை விதிக்க வேண்டும்; அதற்கான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேசிய அளவில் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இவ்வாறு வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ''ஒரு தடையால் நேபாளத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை இந்த உலகமே பார்த்தது. எனினும், இந்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது,'' என கூறினார். போராட்டம் வரும் 23ம் தேதியுடன் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெறவுள்ளதால், இம்மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. நம் அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், தலைநகர் காத்மாண்டுவில் கடந்த செப்., 8 மற்றும் 9ம் தேதிகளில், அரசுக்கு எதிராக இளைஞர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதனால், நேபாளத்தில் ஆட்சியே ஆட்டம் கண்டது. பிரதமர், அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி பதவி விலக நேர்ந்தது. வன்முறை சம்பவங்களில், 76 பேர் கொல்லப்பட்டனர். அதே சமயம், இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. --- டில்லி சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tetra
நவ 05, 2025 17:48

மிக வேதனையான போக்கை உச்ச நீதிமன்றம் கடைப்பிடிக்கின்றது. அரசியல் சாசனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்


Techzone Coimbatore
நவ 05, 2025 11:08

தெரு நாய்களுக்கு எதிராக மட்டும் தான் நீதிமன்றங்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் மனிதர்கள் செய்யும் எந்த தவறுகளுக்கும் கடும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஏனென்றால் மனிதர்கள் என்றால் உயர்ந்தவன். அவன் என்ன அசிங்கங்களையோ செய்யலாம்.


Ms Mahadevan Mahadevan
நவ 04, 2025 15:53

சட்டங்களால் ஒரு பயனும் இல்லை. சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு சமூக நநைல் இணக்கம் நல் வளர்ப்பு மட்டுமே தேவை


Chandrasekaran Balasubramaniam
நவ 04, 2025 11:08

எல்லாம் சரிதான். ஆனால் இதைவிட மோசம் சினிமா டிவி தொடர்கள் பிக்பாஸ் போன்ற சமூக சீராளிவுக்கான நிகழ்ச்சிகள் வன்முறை சம்பவங்கள் இளைஞர் இளைஞகளை நாள்தோறும் ஒளிபரப்பி நாட்டை கெடுக்கிறார்களே மேலும் எந்த சினிமா பார்த்தாலும் ஜாதி வன்முறை தான். முதலில் இதைத்தான் தடை செய்ய வேண்டும்.


Techzone Coimbatore
நவ 05, 2025 11:10

இங்கே பணம் தான் எல்லாவற்றிற்கும் பிரதானம். ஆதலால், எவன் எப்படி குட்டிசுவரானாலும் மற்றவர்களுக்கு கவலையில்லை.


K.aravindhan aravindhan
நவ 04, 2025 11:08

நிதிமான்கள்.


Sundaran
நவ 04, 2025 07:22

இதை போன்ற தீர்ப்பை வேரு யாராலும் கொடுக்க முடியாது. போலீஸ் ரௌடியைகளை அடக்கினால் அவர்களும்போராடுவார்கள் அவர்களையும் விட்டு விடலாமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை