உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுத் திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டு: சிறப்பு புலனாய்வு குழு கோரிய மனு தள்ளுபடி

ஓட்டுத் திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டு: சிறப்பு புலனாய்வு குழு கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி: ஓட்டுத் திருட்டு குறித்த காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.காங்கிரஸ் எம்பி ராகுல், ஹரியானா, மஹாராஷ்டிரா, சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் திருடப்பட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்காக சில தொகுதிகளின் தரவுகளையும் வெளியிட்டார். மீடியாக்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இது தொடர்பான பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்து போட்டு சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியது. இது தொடர்பாக சில மாநில வாக்காளர் பட்டியல் அதிகாரிகளும் ராகுலுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அப்போது முதல் ஓட்டுத் திருட்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yiybrq93&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ரோஹித் பாண்டே என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் ஓட்டுத் திருட்டு தொடர்பாக கடந்த ஆக.,7 ல் ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பொது நல மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன்,மனுதாரர் தேர்தல் கமிஷனை அணுக வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரரின் வாதத்தை கேட்டோம். பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த மனுவை நாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவர் தனது கோரிக்கையை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சிட்டுக்குருவி
அக் 13, 2025 22:45

தேர்தல் சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிக்க தேர்தல்கமிஸ்ஸின் அமைப்புகள் இருக்கும்போது அங்கு முறையிடாமல் நேராக உச்சநீதிமன்றம் வந்து நீதிமன்றத்தின் நேரத்தைவீணடிப்பதற்கு அபரீதமான அபராதம் விதிக்கவேண்டும் .


M.Sam
அக் 13, 2025 20:12

இது எல்லா, ஐரிந்தது தான் அம்புட்டும் நாடகம் அவ்வம் அப்பாபிவி மக்கள் ஈகை கூம்புதுறை தெய்வம் உண்மை என்றால் அது உங்களை thandikitam


Santhakumar Srinivasalu
அக் 13, 2025 20:03

மக்களின் ஆதரவு பெற்று வெல்ல முடியாமல் தேவையில்லாமல் ஓட்டு திருட்டு பிரச்சனையை கோர்ட்டுக்கு கொண்டு வந்து கோர்ட் நேரத்தை வீணாக்கும் இவர்களுக்கு நல்ல அபராதம் விதிக்க வேண்டும்!


GMM
அக் 13, 2025 19:51

பொது நல வழக்கு அல்ல. வாக்காளர் குறை தீர்க்க தேர்தல் ஆணையம் வழிமுறை வகுத்துள்ளது. அதில் ஒரு வக்காளருக்கு குறை இருக்கும் போது, விதிகள் கூறிய பிறகும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் அணுகலாம். தவறான வழக்கு தவிர்க்க அபராதம், வக்கீல் தொழில் செய்ய 5 ஆண்டுகள் தடை விதிக்க நீதிமன்றம் முன் வர வேண்டும். நீதிமன்றம் ஒன்றும் விளையாட்டு திடல் இல்லை. மனு தள்ளுபடி சரியே.


சிட்டுக்குருவி
அக் 13, 2025 19:50

எங்கேயோ ஒரு அயல்நாட்டில் தேர்தலில் தோற்றவர் ஒருவர் ஒட்டு திருட்டு என்று புலம்பிக்கொண்டே இருந்து அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற்றுவிட்டார் .அதை முன் உதாரணமாக கொண்டு இங்கும் இவர் புலம்பிக்கொண்டிருக்கின்றார் .அங்கைய அரசுஇயல் அமைப்பு ,தேர்தல் வழிமுறைகள் ,மக்களின் மனபோக்கு , கலாச்சாரங்கள் வெவ்வேறானவை .அதனால் அது இங்கேயும் வெற்றிபெறும் வாய்ப்பே இல்லை .இங்கு தேர்தலில் வெற்றிபெற முக்கியமானதாக கருதப்படுவது முன் அனுபவம் .ராகுல் பிரதம மந்திரி ஆகவேண்டுமானால் முதலில் ஒரு மாநிலத்தில் முதன்மந்திரியாக பதவி வகித்து தன் திறமையை வெளிப்படுத்தினால்தான் பிரதமராகும் வாய்ப்புக்கிடைக்கும் .அதைமுதலில் அமல்படுத்தவேண்டும் .ஓட்டு திருட்டு என்று பொத்தாம்பொதுவாக கூறிக்கொண்டிருந்தால் இங்கும் பருப்புவெகாது .ஓட்டு திருட்டு இருந்தால் தகவல்களுடன் மாநில தேர்தல் கமிஷனரிடம் முறையாக தகுந்த ஆதாரங்களையும் கொடுத்தால் கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுப்பவர்கள் .இல்லையென்றால் நீங்கள் மனநிலைபாதிக்கப்பட்டவராகத்தான் மக்கள் நினைப்பார்கள் .


MARUTHU PANDIAR
அக் 13, 2025 19:43

நீதி மன்றத்தின் யதார்த்தம். ஆனால் பலபல ஊழல் மூலம் நாட்டு மக்கள் நிதியை கொள்ளை அடித்த கட்சியின் தலைவனை " என்றழைப்பதில் என்ன தவறு?


ஆரூர் ரங்
அக் 13, 2025 19:31

தேர்தல் முறைகேடு செய்து பதவியிழந்த முதல் மற்றும் ஒரே பிரதமர் அப்பத்தா இந்திரா தான்.


VenuKopal, S
அக் 13, 2025 19:26

என்னபா கான் க்ராஸ் மீது அவ்ளோ பயமா...?


வாய்மையே வெல்லும்
அக் 13, 2025 21:25

கோவாலு இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி.??. இன்னோரூ தபா வெளிநாட்டில் ரகுலு போயிட்டு நடுரோட்டில் குட்டிகரணம் அடிச்சு ஆடுறா ராம ஆடு கொரங்காட்டம் ஆடவேண்டியது தான் பாக்கி உலகமே இந்தியாவை பார்த்து கேள்வி கேட்குமே .. செய்வாரா உங்க ராகுல் பாய் ?? பியூன் வேலைக்கு கூட லாயக்கற்றவர் ராகுல் என்பதை மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறியதை நினைவு படுத்துகிறேன்.


Balakumar V
அக் 13, 2025 19:16

எடுபடாத பொய் புரட்டு வாதம். மக்களும் விரைவில் நிராகரிப்பார்கள்.


Gurumurthy Kalyanaraman
அக் 13, 2025 19:12

தான் திருடி அசல் நம்பான் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை