உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் வழிபாடு மற்றும் பிரசாதத்திற்கு நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை, சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் வழிபாடு மற்றும் பிரசாத பயன்பாட்டிற்கு நாட்டு மாடுகளின் பால் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், 'ஆகம சாஸ்திரங்களின்படி, நாட்டு மாடுகளின் பாலை பயன்படுத்துவது ஒரு அத்தியாவசிய பராம்பரியம் என்று வாதிட்டார்.இதற்கு பதிலளித்த நீதிபதி சுந்தரேஷ், ''இத்தகைய வகைப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மொழி, சாதி, சமூகம் அல்லது மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டவை. கடவுளால் விதிக்கப்பட்டவை அல்ல.''கடவுள் எல்லா மனிதர்களுக்கும் சமமானவர். அவர் அனைவருக்கும் கருணை காட்டுபவர். மற்ற உயிரினங்களிடமும் அதே கருணையை காட்டுபவர். கடவுள் ஒரு உள்ளூர் பசுவின் பாலை மட்டுமே விரும்புகிறார் என்று நீங்கள் கூற முடியாது. பசுவில் அனைத்து இனங்களும் பசுதான். மனுவை பரிசீலிக்க விரும்பவில்லை என்று கூறி கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.இதையடுத்து, மனுதாரர், மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.தேவையெனில் அவர், மாநில உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rajasekar Jayaraman
ஜூலை 22, 2025 05:32

நல்லது எதையும் ஏற்காது உச்ச நீதிமன்றம்.


ஆரூர் ரங்
ஜூலை 21, 2025 22:21

சுத்தமான நாட்டு மாடு என ஏதுமில்லை. பல நூற்றாண்டுகளாகவே கலப்பின கலப்படம் நடக்கிறது. அன்றாடம் பல்லாயிரம் லிட்டர் தேவை எனும் போது நாளைக்கு 2 லிட்டர் தரும் உள்ளூர் மாடுகளை நம்பியிருக்க இயலாது.


Iyer
ஜூலை 21, 2025 21:40

 நாட்டு மாடுகளின் பால் தான் - உண்மையான பால்.  அதுவும் கன்று குடித்த பின் கறந்த பால் தான் உண்மையான பால்.  JERSEY HOLSTEIN போன்ற கலப்பின பசுக்களின் பால் மிகவும் ஆபத்தானவை .  சக்கரை வியாதி, ரத்த அழுத்தம், HEART ATTACK போன்ற வியாதிகள் பெறுக கலப்பின பசுக்களின் பால் ஒரு முக்கிய காரணம் ஆகும்.  இதை பற்றி நீதிபதிகள் என்ன அறிவார்கள்.  திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு கூட இந்த அறிவு இல்லையே - ஆச்சர்யம் தான்.


Barakat Ali
ஜூலை 21, 2025 21:20

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு ........... அந்த விவகாரத்தை நீதிமன்றங்கள் அணுகிய விதத்தை நினைவு கூறவும் .........


Oviya Vijay
ஜூலை 21, 2025 21:00

பல தலைமுறைகளுக்கு ஏற்கனவே சொத்துக்கள் சேர்த்து விட்டார்கள் போல... அதனால் தான் வேலை வெட்டி ஏதுமின்றி இவ்வாரெல்லாம் இவர்களுக்கு யோசிக்கத் தோன்றுகிறது... நாட்டில் அமைதி நிலவ விடவே மாட்டார்கள் போல...


Sudha
ஜூலை 21, 2025 20:58

மனுதாரர் வெங்கடேச சுப்ரபாதம் சொல்ல சொல்லி வலியுறுத்தி இருக்கலாம், வெங்காயம் வெள்ளைப்பூண்டு சாப்பிட கூடாது என்று விதித்திருக்கலாம்


ديفيد رافائيل
ஜூலை 21, 2025 20:40

சூப்பர் நீதிபதி. வழக்கு போட்டவன் கண்டிப்பா மனிதனை தரம் பிடிக்கிறவனாக தான் இருப்பான்.


kannan
ஜூலை 21, 2025 22:01

super comment bro .. first unga religion irukura ootaya then ..


Gokul Krishnan
ஜூலை 21, 2025 22:31

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஏன் கல்வி மறுக்கப்படுகிறது ஏன் அலங்காரம் செய்து கொள்வது மறுக்கப்படுகிறது இது மனிதனை தரம் பிரிக்கும் செயல் இல்லையா


Ganapathy
ஜூலை 22, 2025 02:30

தனது பெயரை தமிழில் எழுதுவதே அவமானம் ஆனா அரபிகள் அடிமையாக இருப்பதே ஆனந்தம் என நினைத்து தனது பெயரை அரபியில் எழுதுவதை பெருமையாக கருதும் ஒரு மூர்க்க முல்லா நீ. மறவாதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை