உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஓட்டளிக்க கட்டாயப்படுத்த முடியாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

 ஓட்டளிக்க கட்டாயப்படுத்த முடியாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

- டில்லி சிறப்பு நிருபர் - தேர்தலில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்க கோரியும், ஓட்டளிக்காதவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப் பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c2yhsvgw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறை தண்டனை உச்ச நீதிமன்றத்தில் அஜய் கோயல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜனநாயகத்தின் அடிப்படை அழகே தேர்தலில் ஓட்டளிப்பது தான். ஆனால் ஓட்டு போடுவதை பலரும் புறக்கணிக்கின்றனர். இவ்வாறு ஓட்டளிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அரசின் எந்த சலுகைகளையும் வழங்கக் கூடாது' என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பஞ்சோலி அ மர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தியா போன்ற நாட்டில் அனைவரும் கட் டாயம் ஓட்டளிக்க வேண்டும் என சொல்வது நடைமுறை சாத்தியமில்லாதது. இங்குள்ள பொருளாதார சூழல்களையும் நாம் பார்க்க வே ண்டியிருக்கிறது. தினமும் உழைத்தால் மட்டுமே ஒருவேளை சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழையை, கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என எப்படி கூற முடியும்? ஏராளமானோர் வெளியூர்களில் தங்கி வேலை செய்கின்றனர். என் அருகே அமர்ந்திருக்கும் நீதிபதி ஜாய் மால்யா பக்சி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கும் அன்று அவர் நீதி மன்ற அலுவல்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மேற்கு வங்கம் செல்ல முடியுமா? அதுமட்டுமில்லாமல் கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயக முறைப்படி தான் ஆட்சி ந டந்து வருகிறது. தள்ளுபடி எனவே ஜன நாயகம் குறித்த விழிப் புணர்வை வேண்டுமானால் பொதுமக்களிடம் ஏற்படுத்தலாமே தவிர, அவர்களை ஓட்டளிக்கும்படி கட்டாயப் படுத்த முடியாது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 17, 2026 13:23

தேர்தல் என்பது வருடம் முழுவதும் நடக்கும் ஒரு செயல் அல்ல. பொதுவாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஒரு செயல். அன்று ஒரு நாள் வொவொரு இந்திய குடிமகனும் தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்ட தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தல் சாவடிக்கு சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும். வாக்களிக்காதவர்களை தண்டிக்கவேண்டாம். ஆனால் வொவொரு குடிமகனும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கவேண்டும்.


koligium வேண்டாமே
ஏப் 17, 2026 05:57

மே வங்க நீதிபதி அரசாங்க ஊழியன். அவருக்கு தபால் ஓட்டு உண்டு. என்ன அபத்தமான ஒப்பீடு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை