உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆரோவில்லுக்கு எதிரான பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

ஆரோவில்லுக்கு எதிரான பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடில்லி : புதுச்சேரியின், ஆரோவில் பவுண்டேஷன் மேற்கொண்ட வளர்ச்சி நடவடிக்கைகளை தடை செய்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டலம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

வனப்பகுதி அல்ல

புதுச்சேரியின் ஆரோ வில் பகுதியில், ஆரோ வில் பவுண்டேஷன் ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்ததாக கூறி, நவ்ரோஸ் கெரஸ்ப் மோடி என்பவர், தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ஆரோவில் பவுண்டேஷன் நடவடிக்கைகளை தடை செய்து, கடந்த 2022 ஏப்ரலில் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவில், 'சர்வதேச நகரியம் அமைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக தான் மரங்கள் வெட்டப்பட்டன. 'மரங்கள் வெட்டப்பட்ட பகுதி, வனப்பகுதி அல்ல' என தெரிவிக்கப்பட்டது. மேலும், 'பல நாடு களைச் சேர்ந்த ஆண் களும், பெண்களும் அமைதியாகவும், முன்னேற்றமான இணக்கத்துடனும் வாழ தேவை யானவற்றை செய்யவே அந்த நகரியம் அமைக்கப்பட இருந்தது' என, ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தள்ளுபடி

இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் பிரசன்னா பி வரேலே ஆகியோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:புதுச்சேரியின் ஆரோவில் பவுண்டேஷன் மேற்கொண்ட வளர்ச்சி பணிகளை தடை செய்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு, எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் கிடையாது. அந்த உத்தரவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. சுற்றுச்சூழல் பாது காப்பு என்ற பெயரில், சட்ட மீறல் எதையும் அனுமதிக்க முடியாது.எனவே, ஆரோவில் பவுண்டேஷன் மேற்கொண்ட வளர்ச்சி நடவடிக்கைகளை தடை செய்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அலுவலகம் பிறப்பித்த உத்தரவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. நீடித்த வளர்ச்சி அவசியமானது தான். அதே நேரத்தில் வளர்ச்சிக்கான உரிமைக்கும், சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமைக்கும் இடையே ஒரு ஸ்திரத்தன்மை அவசியம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

morlot
மார் 19, 2025 18:19

Now auroville is managed by a north indian lady close to Modi.It was d for the foreigners and to live a peaceful harmony. Later central govt took auroville to manipulate in their manner and chase the foreigners and settle the hindiwallas.


karthik
மார் 18, 2025 08:53

நம் நாட்டின் பசுமை தீர்ப்பாயத்தை சீர்படுத்த வேண்டும்.. நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுவிட கூடாது என்ற உள்நோக்கில் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை