உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதி ஆய்வு தொடர்பான வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தும்படி, விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில் சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cdcyjgkm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர். இதை கடந்த 19ல் விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது. இதன்படி, கடந்த 24ல், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, மசூதி நிர்வாகத்தினர் தொடர்ந்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூன்று வேலை நாட்களுக்குள் பட்டியலிட வேண்டும்.ஏதேனும் மறு ஆய்வு, இதர மனுக்கள் இருந்தால், அவையும் மூன்று வேலை நாட்களுக்குள் பட்டியலிடப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில், 2025 ஜன., 8ல், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தொடராது என, நம்புகிறோம். சம்பல் மாவட்டத்தில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். இரு சமூகத்தினரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைதி குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
நவ 30, 2024 11:04

கீழமை நீதிமன்றங்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு சாதமாகவே செயல்படுவதால் தானே உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!


அனந்த ராமன்
நவ 30, 2024 08:04

பயந்தாங்கொள்ளி நீதிமன்றம். வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்களைக் கண்டு அஞ்சுகிறதோ?


J.V. Iyer
நவ 30, 2024 04:43

இதுபோன்ற விசாரணைகளுக்கு உச்சநீதிமன்றம் வந்து ஆஜராகிவிடும். பிறகு இவர்களின்மேல் எப்படி நம்பிக்கை வரும்? தடைக்கல்லுக்கு மறுபெயர் உச்சநீதிமன்றம்.


GMM
நவ 29, 2024 22:56

அமைதி குழு அமைப்பது சிறப்பு. அதிகாரிகள், பாதுகாப்பு படை மீது கல்வீச்சுக்கு விடை தேவை. மசூதி நிர்வாகம் உண்மை அறியும். ஆய்வு தேவையில்லை. 15 ம் நூற்றாண்டில் முகலாயர் படையெடுப்பில் ஆயிரக்கணக்கில் வட இந்திய கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்ட வரலாறு, தடயம் உண்டு. மக்களுக்கு பல இன்னல்கள் நடந்துள்ளது. தற்போது பாபர் வாரிசு இல்லை. ? கோவில் கட்டிய இந்து மன்னர்கள் இல்லை. பூர்விக இந்துக்கள் தான் மதம் மாற்றப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். மசூதி நிர்வகித்து வழிபட்டு வருகின்றனர். இந்து கோவில் இடம் மாற்ற முடியாது. அரசியல் வேண்டாம். அரசிடம் பேசி தீர்வு காண்பது நல்லது. எந்த உரிமையும் பாதிக்காது.


Sathyanarayanan Sathyasekaren
நவ 29, 2024 22:56

நீதிபதிகள் வன்முறை மதத்திற்கு ஆதரவாகவே முடிவுகளை எடுப்பது வருத்தமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை