உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கியதற்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 36; பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பினார். இதையடுத்து, தர் ஷன், பவித்ரா கவுடா மற்றும் கூலிப்படையினர் சேர்ந்து, ரேணுகாசாமியை 2024 ஜூன் 8ல் அடித்து கொன்றனர்.இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதில் தர்ஷன், பவித்ரா ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த விதம் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் செயல்பட்டு உள்ளது.மூன்று பக்கங்களுக்குள் எழுத்துபூர்வமான அரசின் வாதத்தை, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sekar ng
ஜூலை 25, 2025 15:53

பணம் படைத்தவர்களுக்கு உதவ மட்டுமே இருக்கிறது. பணம் உள்ளவகள் என்ன வேண்டுமானாலும் செய்ய உதவும்


c.mohanraj raj
ஜூலை 25, 2025 10:38

உலகிலேயே மிகவும் அருவருக்கத்தக்க மோசமான நீதித்துறை செயல்பாடு இருக்கிறது என்றால் அது இந்தியா தான்


அப்பாவி
ஜூலை 25, 2025 10:03

இவிங்க ஜாமீன் குடுத்தா அவிங்க அதிருப்தியாயி ஜாமீனை ரத்து பண்ணுவாங்க. இவிங்க ஜாமீன் மறுத்தால் அவிங்க அதிருப்தியாயி ஜாமீன் குடுத்துருவாங்க. இதுதான் மரபு.


Jack
ஜூலை 25, 2025 09:59

செந்தில் பாலாஜியின் தம்பி அமேரிக்காவில் இருதய சிகிச்சைக்கு செல்ல அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கார் ...பெரம்பலூர் ஆஸ்பத்திரியில் பண்ண சொல்லி ஆர்டர் போடுங்க யுவர் ஆனர்


V RAMASWAMY
ஜூலை 25, 2025 09:21

நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் நீதி வித்தியாசமாக இருக்கலாமா?


Barakat Ali
ஜூலை 25, 2025 09:18

நம்ம ஊரு செய்தி ....... கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமின் வழங்கியது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .............


Barakat Ali
ஜூலை 25, 2025 09:15

நீதிபதிகள் விலைபோகலாமா ???? மக்கள் நம்புவதற்கென யார் இருக்கிறார்கள் ????


Sudha
ஜூலை 25, 2025 09:13

திட்டமிட்டு கொடூர கொலை புரிந்தால் கூட ஜாமீன் கிடைக்கும் 10-15 ஆண்டுகள் ஓட்டலாம். அட இது ரொம்ப வசதியா இருக்கே


Sudha
ஜூலை 25, 2025 09:11

இந்திய குற்றவாளியாக சட்டத்திலிருந்து ஜாமீன் நீக்கப்பட வேண்டும்


theruvasagan
ஜூலை 25, 2025 08:39

ஜாமீன் வழங்குவது என்பது ஆயிரங்கோடிகளில் ஊழல் செய்தவர்களுக்கு மட்டும் பொருந்தும். அந்த சலுகையை மற்றவர்களுக்கு அளிக்கக் கூடாது.


புதிய வீடியோ