உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பி உள்ளார்.கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 'மூடா' எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.இந்த வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வழங்கிய சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் , வினோத் சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையின்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், 'தயவு செய்து எங்களை வாய் திறக்க வைக்காதீர்கள், ஏனென்றால் அமலாக்கத்துறை பற்றி சில கடுமையான கருத்துக்களை கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும். எங்களுக்கு மஹாராஷ்டிராவில் சில அனுபவம் கிடைத்துள்ளது.ஆகையால், நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் பிரச்னைகளுக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அரசியல் பிரச்னைகளை தேர்தல் களத்திலேயே கடைபிடியுங்கள், அமலாக்கத்துறையை பயன்படுத்தாதீர்கள்' என்று கூறி, முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ramani
ஜூலை 22, 2025 06:47

ஸ்வீட் பாக்ஸ் பேச வைக்குது. இவர்களுக்கு கடிவாளம் போட்டே ஆக வேண்டும் நீதிமன்றங்களுக்கு. எல்லை மீறுகிறார்கள்


theruvasagan
ஜூலை 21, 2025 22:20

அமலாக்கத்துறையையும் அரசாங்கத்தையும் விளாசுபவர்கள் பணமூட்டை நீதிபதி விவகாரத்தி்ல் ஏன் எப்படி என்று கேள்வி கேட்டார்களா. மற்றதெற்கல்லாம் தாங்களாகவே முன்வந்து விசாரிக்க ஓடி வருவார்களே. இந்த விவகாரத்தில் ஏன் மவுனம் சாதிக்க வேண்டும். வழக்கு பதிவது கிடக்கட்டும். விளக்காமவது கேட்டுப் பெறவேண்டும் என்று கூடவா தோன்றவில்லை. தாங்கள் மட்டும்தான் நேர்மையானவர்கள். விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்கிறார்களா.


Iyer
ஜூலை 21, 2025 22:03

 இனிமேல் எந்த ""அரசியல்வாதி""யும் ஊழல் செய்தால் - அவர் மீது வழக்கு தொடுக்கமுடியாது.  ஏனென்றால் அது “”அரசியல் பிரச்னை”” ஆகிவிடும். இந்த இரண்டு நீதிபதிகளையும் கீழ்ப்பாக்கத்தில் ADMIT செய்யணும்


Iyer
ஜூலை 21, 2025 21:57

 சித்தராமையா தன் மனைவியின் பெயரில் PLOT ALLOTTMENT செய்தது உண்மை - எல்லோரும் அறிவர்  இந்த ஊழல் வெளியானதும் - தன் மனைவி பெயரில் ALLOT ஆன PLOT களை அவர் திருப்பி கொடுத்ததும் உண்மை. இதையும் நாடே அறியும். 1. யாரவது அரசியல் வாதி ஊழல் செய்து - அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பினால் அது அரசியல் பிரச்னை ஆகிவிடுமா? 2. கொள்ளை அடித்த கொள்ளைக்காரன் - கொள்ளை அடித்த பொருள்களை திருப்பி கொடுத்துவிட்டால் அவன் செய்த குற்றம் மன்னிக்கப்படுமா?  இந்த நீதிபதிகள் பெரும் லஞ்சம் பெற்றுள்ளார்கள் அல்லது புத்தி பேதலித்து விட்ட நீதிபதிகள் என்பதுதான் உண்மை


V Venkatachalam
ஜூலை 21, 2025 20:38

ஆர் காவாய்க்கு சாக்கடை அரசியல் ரொம்ப புடிக்கும் போல. ஆனானப்பட்ட அரசியல் வியாதிக்கு கூட இவ்வளவு அட்சரம் பிசகு இல்லாம பேச முடியாது இவர் சொல்வது பட்டப்பகல் மிரட்டல். ஜனாதிபதி அவர்களின் கேட்ட கேள்விகள் இவர் மண்டைய பொளந்துட்டு அப்புடீங்குற அடையாளம் தான் இவரு பேச்சு. என்னை எதுவும் சொல்ல வைத்து விடாதீர்கள் ன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஜனாதிபதி இவர் மண்டைக்குள் உக்காந்திருக்கார். அதன் உஷ்ணம் தகிக்கிறது.


V Venkatachalam
ஜூலை 21, 2025 20:12

உச்ச நீதி மான் காவாய் அபிஷேக் மனு சிங்வி மற்றும் கபில் சிபல் இவிங்க வருமானத்தில் மண்ணை அள்ளி போட்டு விடுவார். என்ன ஒரு அபாரமான பேச்சு. நாடு நாசமாயிடும் போல இருக்கே. எங்க டாடி மோடிக்கும் பயப்பட மாட்டார் ஈடிக்கும் பயப்பட மாட்டார்ன்னு பிறப்பால் து மு ஆன உதவா நிதி பேசியது சரிதானா?


GMM
ஜூலை 21, 2025 19:30

அமுலாக்க துறை சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேல் முறையீடு . ரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய அதிகாரம் இருக்கும். மத்திய அரசு சொலிசியேட்டர் சட்டத்திற்கு வெளியே நீதிபதி கூறிய கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்து இருக்க வேண்டும்.


Rajasekar Jayaraman
ஜூலை 21, 2025 19:23

சித்தராமையா மனைவி தவறு செய்யவில்லை என்று நீதிபதிகள் சொல்ல முடியுமா அமலக்க துறை கையை கட்டுவது சந்தேகமாக இருக்கிறது.


Rajasekar Jayaraman
ஜூலை 21, 2025 19:11

அரசியல்வாத்திகளை தாண்டிக்க கூடாது என்பதில் உச்ச நீதிமன்றம் கொள்கை முடிவு எடுத்துள்ளாதோ என்று சந்தேகமாக இருக்கிறது.


ramani
ஜூலை 22, 2025 06:50

ஸ்வீட் பாக்ஸ் வேலை செய்யுது


தாமரை மலர்கிறது
ஜூலை 21, 2025 19:09

அமலாக்கத்துறையை அதன் வேலையை செய்ய சுப்ரிம் கோர்ட் அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின், கர்நாடகாவில் சித்தராமையா, மேற்குவங்கத்தில் மம்தாவின் ஊழல்கள் அதிகம். இந்த அரசுகளின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதை சுப்ரிம் கோர்ட் பாராட்ட வேண்டும். விரைவில் நேஷனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் ஜெயிலுக்குள் போவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை