உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றங்கள் கலெக்ஷன் ஏஜென்டுகளாக மாறக்கூடாது உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீதிமன்றங்கள் கலெக்ஷன் ஏஜென்டுகளாக மாறக்கூடாது உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'பணத்தை வசூலித்து தரும் கலெக்ஷன் ஏஜென்டுகளாக நீதிமன்றங்கள் செயல்படக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கடன் தொகையை திரும்ப பெறும் நடவடிக்கைக்காக, தனிநபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அச்சுறுத்தல் அப்போது, 'கடன் தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வ து சமீப காலங்களாக வழக்கமாகி வருகிறது' என, நீதிபதிகள் கண்டித்தனர். உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் வாதிட்டதாவது: இது போன்ற வழக்குகளில் கடன் பெற்றவர் மற்றும் கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு இடையே போலீசார் சிக்கித் தவிக்கின்றனர். வழக்கை பதிவு செய்யவில்லை எனில், ஏன் பதிவு செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது. ஒருவேளை வழக்குப்பதிவு செய்தால், ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதா என நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இதனால், போலீசார் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கின்றனர். இவ்வாறு அவர் வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: போலீசாருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, இப்படிப்பட்ட வழக்குகளின்போது போலீசார் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒருவரை கைது செய்யும் முன், அது சிவில் வழக்கா அல்லது கிரிமினல் வழக்கா என்பதை சீர்துாக்கி பார்க்க வேண்டும். கிரிமினல் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, நீதி பரிபாலனத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும். அனுமதிக்க முடியாது நீதிமன்றங்கள், கடன் தொகைக்கான பணத்தை வசூலித்து தரும் கலெக்ஷன் ஏஜென்டுகளாக செயல்படக் கூடாது. நீதித் துறையில் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒரு வழக்கு, சிவிலா அல்லது கிரிமினலா என்பதை ஆராய, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வு பெற்ற நீதிபதியை தீர்வு காணும் அதிகாரியாக நியமிக்க வேண்டும். அவரிடம் போலீசார் சென்று, தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். அதை வைத்து, போலீசார் வழக்கு பதிந்து நட வடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ravikrishna Ravigurukkal
செப் 25, 2025 11:35

ஆண்கள் திருமணம் செய்தவுடன் குடும்பத்தைப் பிரித்து தன் வீட்டோடு வரக்கூறி பல வன்கொடுமைகளை செய்து கடைசியில் மாண்புமிகு நீதிமன்றங்களைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அனைத்து வழக்கறிஞர்கள், மாண்புமிகு நீதிபதிகள் ஒன்றினைந்து ஆண்களை அழித்து ஒழித்து விடுகின்றனர்.இந்த அவல நிலைத் தமிழகத்தில் ஒழிக்கப் பட வேண்டும்.


Ravikrishna Ravigurukkal
செப் 24, 2025 23:09

நான் வீட்டோடு மாப்பிள்ளையாக வராத ஒரே‌ காரணத்தால் என் மீது என்மீது பொய் வரதட்சணை வழக்குத் தொடர்ந்து , குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பொய் வழக்கிற்கு இதுவரை10,00000 வரை செலவு செய்து, ஒரு மாத காலம் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்றரை வருட காலம் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டேன்.இந்த அவல நிலை இனிமேல் யாருக்கும் வரக் கூடாது.


Ravikrishna Ravigurukkal
செப் 24, 2025 22:58

வரவேற்கிறேன்.


GMM
செப் 24, 2025 10:23

சிவில், கிரிமினல் எல்லை இன்று வரை அறியாமல் போலீஸ், நீதிபதி பணிகள். அனைத்து நடவடிக்கைக்கு சட்டம், விதி, அரசாணை, மரபு பின்பற்ற வேண்டும். அப்போதைக்கு அப்போது முடிவு செய்ய அமுலாக்க அதிகாரிகளுக்கு தான் பொருந்தும். சட்ட, நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்ய ஊழல் , பாகுபாடு உருவாகும். விதி இருந்தால், ஓய்வு பெற்ற நீதிபதி எதற்கு? நீதிமன்ற உள் வரும் தனி நபரை போலீஸ் யார் என்று கேட்காமல் எப்படியும் தடவி பரிசோதனை செய்யலாம். போலீஸ் தான் அறியாத அரசு அதிகாரி, வக்கீல், நீதிபதியாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் சோதிப்பர். ஏனென்றால் அவருக்கு விதி கிடையாது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபரை அமெரிக்கா போலீஸ் நிறுத்தியது. சர்வதேச சட்ட, மரபு விரோதம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் சட்ட விதிகள் வகுக்க தான் மக்கள் பிரதிநிதிகள். நீதிமன்றம் நாடே தன் கீழ் தான் என்று செயல்பட்டு வருகிறது. இது நீடிக்க கூடாது.


அப்பாவி
செப் 24, 2025 09:02

லட்சக் கணக்கில் வழக்குகளை தேக்கி வெச்சு பூச்சி காமிபதுதான் இவிங்க நீதிபரிபாலணை யின் லட்சணம்.


R K Raman
செப் 24, 2025 08:53

நீதிபதிகள்??


kannan
செப் 24, 2025 07:40

என்மீதும் இவ்வாறு தான் வழக்கு போட்டு உள்ளார்கள். இவர்கள் சொல்வது தீர்ப்பு எங்கள் பக்கம்தான் சாதகமாக வரும். 100 தடவை நாங்கள் கோர்ட்க்கு வந்தாலும் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. கம்பெனி செலவு தான். உனக்கு பணம் செலுத்தவே வக்கு இல்லை, உன்னால் எப்படி எங்களுக்கு சமமாக எதிர்த்து எப்படி வழக்கை தொடர்ந்து நடத்த முடியும் என்கின்றனர். மேலும் எங்கள் வழக்கு கட்டணமும் நீதான் செலுத்த வேண்டும் என்கின்றனர். (இவர்கள் தீர்ப்பை தீர்மானித்து விட்டுதான் மிரட்டுகின்றார்கள் என்றுதான் தோன்றுகிறது).


பெரிய குத்தூசி
செப் 24, 2025 07:01

திமுகவுக்கு நல்ல கலெக்ஷன் ஏஜென்ட்களாக டெல்லியில் நிறைய நீதிபதிகள் உள்ளனர்.


Mani . V
செப் 24, 2025 05:06

காமெடி? ஒவ்வொரு ஊழல்வாதியையும் வழக்கில் இருந்து விடுவிக்கும் பொழுதே, இது கலெக்ஷன் அலுவலகம்தான் என்று படிக்காத பாமரன்கூட கண்டு பிடித்து விடுகிறான்.


Kasimani Baskaran
செப் 24, 2025 04:00

ஒருவரை குற்றவாளியில்லை என்று தீர்மானிக்க அரை நூற்றாண்டு ஆகிறது. செலவு செய்த தொகையை நினைத்தால் குலை நடுங்குகிறது. இதையெல்லாம் நீதிபரிபாலனம் என்று சொல்வது வேடிக்கை - ஒருவேளை நீதி வர்த்தகம் அல்லது நிதி பரிபாலனம் என்று சொன்னால் சம்மதிப்பார்களா தெரியவில்லை..


Ravikrishna Ravigurukkal
செப் 25, 2025 11:41

ஆம். ஆனால் ஒரு வழக்கறிஞர் நினைத்தால் பெண்களின் வரதட்சணைச் சட்டம் போன்ற பெண்களின் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆண்களை அழித்து ஒழித்து விடலாம். எவ்வளவு பணம் லட்சக்கணக்கில் செலவழித்தாலும் எந்த மாண்புமிகு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் அனைத்து வழக்கறிஞர்களும் ஆண்களுக்கு எதிராகச் செயல்பட்டு ஆண்களின் உடமைகள், சம்பாரித்தப் பணம், குழந்தைகள் ஆகிய அனைத்தையும் மாண்புமிகு நீதிமன்றங்கள் மூலம் பிடிங்கிக் கொண்டு ஆண்களுக்கு சாகும் வரை நீதி கிடைக்காது இந்தியாவில் என்பதே கண்கண்ட உண்மை.


சமீபத்திய செய்தி