உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் சர்வேக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்; சர்வேயர் கைது

டிஜிட்டல் சர்வேக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்; சர்வேயர் கைது

மூணாறு, : கேரளமாநிலம் மூணாறு அருகே பைசன்வாலி கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பொட்டன்காடு பகுதியில் தனியார் ஏலத்தோட்டத்தை டிஜிட்டல் சர்வே நடத்துவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தற்காலிக சர்வேயரை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கைது செய்தனர்.அப்பகுதியில் உள்ள 146 ஏக்கர் தனியார் ஏலத் தோட்டத்தை டிஜிட்டல் முறைபடி சர்வே நடத்துவதற்கு, தேவிகுளம் தாலுகா தற்காலிக சர்வேயர் நிதின் 34, ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார். அந்த தொகையை வழங்க இயலாது என தோட்ட உரிமையாளர் கூறியதால், ரூ.75 ஆயிரமாக குறைத்தார். அதில் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுக்குமாறு நிதின் கேட்டார்.அது குறித்து தோட்ட உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி ரூ.50 ஆயிரம் வழங்க முன் வந்த உரிமையாளர் நேரியமங்கலம் பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகை முன் நிதினை வர வழைத்தார். அங்கு அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை நிதின் வாங்கியபோது, இடுக்கி லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி. ஷாஜூஜோசப் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

muthu
ஜன 02, 2025 18:05

Lot of govt male surveyor are taking bribe for doing their duty after govt fees . Not paying corruption they themselves are closing the subject matter . If govt introduce feedback tem from the petitioner then not surveyed and asking bribe etc will come to know in light . Let the feedback from anti corruption wing will ensure stoppage of salary and retirement benefits will make govt servant do their duty on the full satisfaction of petioner


Karunagaran
ஜன 02, 2025 10:14

160 ஏக்கர் பரப்பளவில் அளப்பது கடினமான வேலை முட் புதர்கள் மற்றும் சுமார் 300 காணி கற்கள் 2.9 அடி ஆழம் நோண்டி நட வேண்டும் ஜன்டா கொடி நட்டு அளக்க வேண்டும் மேலிடம் கீழிடம நீ லஞ்ச பங்கு கொடுத்து வாங்கிய தாசில்தார் அதிகாரிகள் எந்த ஒரு நபரும் வரமாட்டார்கள் டிரான்ஸ்பர் 5 லட்சம் லஞ்சம் கேட்கும் ஊர் இடம் மாறி 5 லட்சம் பட்டா ஆணை வழங்க தாசில்தார் உட்பட 9 அதிகாரிகள் பங்கு கொடுத்து கையொப்பம் புல் தணிக்கை கவர் பணம் வழங்கும் போது பகலில் போன் காமிரா சுவர் காமிரா வாட்ச் காமிரா மூக்கு கண்ணாடி காமிரா கக்கூஸ் காமிரா பக்கம் பார்த்துப் பார்த்து இரவில் உஷாராக லஞ்சம் விலைவாசி உயர்வு மூலம் கீழ்நிலை அதிகாரிகள் ஐயோ பாவம்


Karunagaran
ஜன 02, 2025 10:00

தனியார் சல்மான் கட்டி அளக்க வேண்டும்.இருப்பினும் சர்வே பணி கடினமானது 160 ஏக்கர் பரப்பளவில் அளப்பது கடினமான வேலை. இதற்கு சுமார் 300 4 அடி உயர காணி கற்கள் பள்ளம் தோண்டி எடுத்து நடவேண்டும் ஒரு மாத பணி செய்மானம் ஆகும் முட் புதர்கள் வெட்டி ஜண்டா கொடிகள் நட்டு அளக்க வேண்டும் ஆனால் அதிக பணத்தாசை யாரை விட்டது சனிஸ்வர பகவான் பிடித்து விட்டது இனி தினமும் 9 சுற்று வீதம் வலது இடது 2 சுற்று கோயிலிலும் அதிகாரிகள் வசம் சுற்றவேண்டும் உறவினர்கள் நண்பர்கள் உன்னிடம் லஞ்சம் பங்கு வாங்கிய மேலதிகாரிகள் பொண்டாட்டி மதிக்க மாட்டார்கள்


புதிய வீடியோ