உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்க: பா.ஜ., வலியுறுத்தல்

மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்க: பா.ஜ., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் வன்முறை களமாக காட்சியளித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மே.வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரியும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது.இச்சம்பவத்திற்கு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குவங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி, ''மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்,'' என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஆக 27, 2024 19:52

ஜனாதிபதி ஆட்சின்னு சொல்லி இவிங்க ஆளுங்க ராஜ்ஜியம்தான் நடக்கும்.


வாய்மையே வெல்லும்
ஆக 27, 2024 21:49

அப்போ திருட்டு மமதையில் ஆட்சிதான் வேணும் என்கிறாய் ... எவ்வளவு நல்ல புத்தி திராவிட அடிமைகளுக்கு


சமூக நல விரும்பி
ஆக 27, 2024 19:48

Implement President rule immediately. That is the only solution for our Nation now


தமிழன்
ஆக 27, 2024 18:47

மத்திய அரசு தூங்குகிறதா?


xyzabc
ஆக 27, 2024 18:44

Right decision


ஆரூர் ரங்
ஆக 27, 2024 18:25

ராணுவ உதவியுடன் தேர்தலை நடத்தினாலும் மமதாவை இப்போதைக்கு வெல்வது கடினம். மேற்கு வங்க முட்டாளகள் திருந்தும் வரை ஜனாதிபதி ஆட்சியே சரி. ஆனால் சுப்ரீம்பதிகள் ஏற்க வேண்டுமே


அசோகன்
ஆக 27, 2024 18:06

அங்கு நடப்பது காட்டாச்சி..... எப்போதோ கலைத்திருக்கவேண்டும்


கோவிந்தராசு
ஆக 27, 2024 17:54

ஜனாதிபதி ஆட்சி என்பது இப்போதைக்கு. சரியான . தீர்வு


புதிய வீடியோ