ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
பாலக்காடு; பாலக்காட்டில், ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம், வரும் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.கேரள மாநிலம், பாலக்காட்டை மையமாகக் கொண்டு, கடந்த, 27 ஆண்டுகளாக செயல்படும் கலை அமைப்பு ஸ்வரலயா. இந்த அமைப்பு கடந்த, 23 ஆண்டுகளாக டிச., மாதம் நடன சங்கீத உற்சவம் நடத்துவது வழக்கம்.நடப்பாண்டு 'சமனுவயம்' எனற தலைப்பில் நடக்கும், 24வது நடன சங்கீத உற்சவம் வரும், 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகின்றன. 21ம் தேதி மாலை 5:30 மணிக்கு கலால் துறை அமைச்சர் ராஜேஷ் நடன சங்கீத உற்சவத்தை துவக்கி வைக்கிறார். அமைப்பின் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகிக்கிறார்.தொடர்ந்து பாடலாசிரியர்களான பிச்சு திருமலை, ராஜேந்திரன் ஆகியோரின் பாடல்களை தொகுத்து இசை நிகழ்ச்சி நடைபெறும். பிரபல பின்னணி பாடகர்கள் கலந்து கொள்ளும் பாடல் திருவிழா, பிரபலங்களின் கர்நாடக இசை கச்சேரிகள், ஹிந்துஸ்தானி சங்கீதக் கச்சேரிகள், வாத்தியக் கச்சேரிகள், பிரபல நாட்டிய கலைஞர்களின் நடனங்கள் உள்ளிட்ட, 26 நிகழ்ச்சிகள் இந்த உற்சவத்தில் அரங்கேறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளை, அமைப்பின் செயலாளர் அஜயன், துணைத் தலைவர் வத்சன், பொருளாளர் பிரசாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.