வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கடற் படைகக்கு மிக்க நன்றி அந்த சிறுவன் விரைவில் பூரண நலன் பெற வேண்டும்
அபாரம் தொடரட்டும் மனித நேயம்.
வாழ்த்துக்கள் .
காலத்தால் செய்த உதவி ஞாலத்தினும் பெரிது.
கொச்சி: லட்சத்தீவில் உடல்நலக்குறைவால்பாதிக்கப்பட்ட சிறுவனை, கடற்படை விமானம் மூலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.லட்சத்தீவின் அகாட்டித் தீவில் வசிக்கும் 7 வயது சிறுவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என லட்சத்தீவு நிர்வாகம் சார்பில் இந்திய கடற்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஐஎன்எஸ் கருடா போர்க்கப்பலில் இருந்து விமானம் ஒன்று, மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது பெற்றோரும் அந்த விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாட்டிற்கு சேவை ஆற்றுவதில் தங்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை இது காட்டுவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
கடற் படைகக்கு மிக்க நன்றி அந்த சிறுவன் விரைவில் பூரண நலன் பெற வேண்டும்
அபாரம் தொடரட்டும் மனித நேயம்.
வாழ்த்துக்கள் .
காலத்தால் செய்த உதவி ஞாலத்தினும் பெரிது.