மேலும் செய்திகள்
தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு
26-Sep-2024
ஜெய்ப்பூர்:கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரத்தில் தூக்குப் போட்டு தாசில்தார் தற்கொலை செய்து கொண்டார்.அண்டை மாநிலமான ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டம் பய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங்,40. தாசில்தாராக பதவி வகித்தார். ஐந்து நாட்களுக்கு முன், தோல்பூரில் இருந்து கரவுலி கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.கரவுலி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு வந்தவர்கள் மரத்தில் தொங்கும் ஆண் உடல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.கோட்வாலி போலீசார் வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜேந்திர சிங் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடக்கிறது.
26-Sep-2024