உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு சாண்டல் துாதராக தமன்னா; அமைச்சர் விளக்கம்

மைசூரு சாண்டல் துாதராக தமன்னா; அமைச்சர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சதாசிவநகர் : பிரபல நடிகை தமன்னாவை, மைசூர் சாண்டல் சோப் நிறுவன துாதராக, கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக துறை நியமித்துள்ளது. இதற்காக அவருக்கு 6.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் உட்பட பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'கன்னட நடிகையரை நியமித்திருக்கலாம்' என, கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்கு பதிலளிக்கும் வகையில், மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பேட்டி:துாதர் பொறுப்புக்கு முதலில் நாங்கள் நடிகை ராஷ்மிகாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் வேறொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்ததால், தன்னால் முடியாது என, கூறினார்.அதன்பின் நடிகை ஸ்ரீலீலாவை தொடர்பு கொண்டோம். அவரும் முடியாது என, கூறினார். கன்னட நடிகையர் முன் வராததால், கமிட்டியின் ஆலோசனைப்படி, நாங்கள் நடிகை தமன்னாவை தேர்வு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
மே 24, 2025 08:22

இந்த கலாச்சரத்தை திமுகதான் முதலில் ஆரம்பித்தது. மற்றவர்கள் பின் போற்றுகிறார்கள். ஒரு காலத்தில் தமிழ் தொடர்பு மொழியாகவும் விதான்சவுதாவில் இருந்தது அதை கெடுத்தது திமுகவின் நடவடிக்கைகள் தான்


Padmasridharan
மே 24, 2025 06:18

கன்னடம் இந்திய மொழிதானே. தமன்னா இந்திய நடிகைதானே. அப்ப பேச முடியாதவங்க மாற்றுத்திறனாளிகளின் மொழி என்ன. எல்லாத்தலயும் மொழி /மத பற்றை புகுத்தி தனித்துவமா இருக்கணும்னு நினைக்கிறவங்க தனியாவே இருக்க நேரிடும். பிரச்சனைகள் வரும்போது மத்தவங்க யாரும் உதவி பண்ண வரமாட்டாங்க.


Natarajan Ramanathan
மே 24, 2025 02:50

SRINIDHI SHETTY is the most sui for Mysore sandal soap advertisement.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை