உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகளுக்கு தமிழில் பயிற்சி: தலைமை தேர்தல் கமிஷன் திடீர் முடிவு

அதிகாரிகளுக்கு தமிழில் பயிற்சி: தலைமை தேர்தல் கமிஷன் திடீர் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன் எப்போதும் இல்லாத வகையில், முதன் முறையாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தேர்தல் அலுவலர்களுக்கு தமிழிலேயே தலைமை தேர்தல் கமிஷன் பயிற்சி அளித்தது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் அலுவலர்கள், ஊழியர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷன் பயிற்சி அளிக்க துவங்கியுள்ளது. பூத் அளவிலான அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 264 பேர், ஓட்டுப்பதிவு அதிகாரிகள் 14 பேர், இரண்டு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு மட்ட தேர்தல் பணியாளர்கள் என 293 பேர், நேற்றைய பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றனர். டில்லியில் இரண்டு நாள் நடக்கும் இந்த பயிற்சியில், முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தமிழிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை துவக்கி வைத்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், ''வாக்காளர் பட்டியலை மிகச் சரியாக தயாரிக்கவும், அவ்வப்போது தவறின்றி புதுப்பிக்கவும் தேர்தல் கமிஷனின் முதலாவது முகமாக இருப்பவர்கள், பூத் அளவிலான அதிகாரிகள்,'' என குறிப்பிட்டார்.வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு படிவங்களை துல்லியமாக நிரப்புவது குறித்து, பூத் அளவிலான அதிகாரிகளுக்கு நாடகங்கள், கருத்தரங்கம் உள்ளிட்டவை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.டில்லியில் பயிற்சி பெற்றவர்கள், சட்டசபை தொகுதியின் முதன்மை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அடுத்த சில அண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இதுபோன்ற பயிற்சி அளிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக 2,300 பேருக்கு தேர்தல் கமிஷன் பயிற்சி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
மே 08, 2025 18:45

அங்கே உ.பி, பிஹாரில் தமிழை கட்டாயமாக்குங்க. இங்கே அதிகாரிகள் கெவுனர் ரவி அஞ்சு வருசமா தமிழ் கத்துக்கிட்ட மாதிரி ஆயிரப் போகுது.


ராமகிருஷ்ணன்
மே 08, 2025 07:11

தமிழில் பயிற்சி OK ஆனால் தமிழர்கள் வேண்டாம். திமுக விலைக்கு வாங்க வாய்ப்பு வந்துவிடும். மிக நேர்மையான அதிகாரிகள் வரணும்.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 08, 2025 05:48

தமிழக புதுச்சேரி அரசு அலுவலர்களுக்கு ஆங்கிலம் அறவே வராது என்பது உலகறிந்த செய்தி. தற்காலம் தமிழும் தகராராத்தான் இருக்கு. வக்கணையா பேசுவாங்க. எழுதச்சொன்னா தன்ணீர் னு எழுதறாங்க.


Kasimani Baskaran
மே 08, 2025 03:41

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். தடுத்தால் தேர்தல் கமிஷன் வேலை செய்து இருக்கிறது என்று பொருள்.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 08, 2025 06:54

ஓட்டுக்கு பைசா தரப்படாது. நம்மாள் வேட்பாளர்களுக்குத்தான் தேர்தல் சாக்கில் சில கோடிகளைத்தந்து பங்களா கட்டிக்க கொள்ள சொல்லலாம்.


மீனவ நண்பன்
மே 08, 2025 03:32

தமிழில் மருத்துவ பாடங்கள் எப்போ சொல்லி தருவாங்க ?


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 08, 2025 08:46

நம்ம ஊரில் படித்து டாக்டராகிறவங்க வெளிநாட்டில் போய் வேலையில் பார்க்க கூடாது என்பது கள்ளத்தனம் விருப்பம். நம்ம ஈனவா நண்பர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டாமா. தத்திகள்


சமீபத்திய செய்தி