உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்!

டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்!

புதுடில்லி: டில்லி சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 29) பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அண்மையில் தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அவசர அழைப்பில் டில்லி சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2y1xhumm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அவருக்கு தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகளை, மக்களுக்கு எல்லா வழிகளிலும் எடுத்துச் சொல்ல வேண்டும், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை இதற்காகவே திட்டமிடுங்கள் என பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை அமித்ஷா வழங்கி உள்ளார். அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 29) 12 மணி அளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உடன் சென்று இருந்தனர். பிரதமர் மோடி நயினார் நாகேந்திரன் உடன் தமிழக அரசியல் சூழல் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பா.ஜ., மாநில தலைவரான பின் முதல்முறையாக நயினார் நாகேந்திரன் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

திருட்டு திராவிடன்
ஏப் 29, 2025 22:33

அண்ணாமலை இல்லாத பிஜேபியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.


கோபாலகிருஷ்ணன்
ஏப் 29, 2025 17:50

சென்று வென்று வருக....


Suresh Velan
ஏப் 29, 2025 15:24

ஆமா , அண்ணாமலை சத்தம் காணலியே , அடக்கி வாசிக்க சொல்றாங்களா


sundar
ஏப் 29, 2025 15:00

வரும் தேர்தலில் அதிமுக பாஜவுக்கு துரோகம் செய்யும்.அண்ணாமலை மீது நம்பிக்கை வைத்த மக்களும் பாஜக வை ஒதுக்குவார்கள்.கஷ்டப்பட்டு அண்ணாமலை செதுக்கிய பொன் குடத்தை மண் குடமாக்கி உடைக்கத்தான் வழி செய்கிறார்கள்.உருப்படாத வழிமுறைகள்


Mettai* Tamil
ஏப் 29, 2025 14:19

வாழ்த்துக்கள் நைனார் அவர்களே .....


Murugesan
ஏப் 29, 2025 14:18

பாஜக நாசமாக போகும் அண்ணாமலையை நயவஞ்சகமாக வெளியேற்றியது அதிமுக அடிமைகளின் கூட்டம் ,மோடி அமித்ஷா வருகின்ற தேர்தல்ல ஒரு இடம் கூட கிடைக்காது ,நோட்டா தான் பிரதமரே,


TRE
ஏப் 29, 2025 12:57

டில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்


முக்கிய வீடியோ