உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் தவிப்பு; சென்னை அழைத்து வர ஏற்பாடு

வாரணாசியில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் தவிப்பு; சென்னை அழைத்து வர ஏற்பாடு

லக்னோ: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானத்தில் சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தென்னிந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் பங்கேற்று விட்டு ஊர் திரும்ப முடியாமல், ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர். கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தால் தமிழகம் வர முடியாத சூழலில் உள்ள தங்களை மாநில அரசு அழைத்து வர உதவ கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கிரிக்கெட் வீரர் கேப்டன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தோம். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரயிலில் ஏற முடியவில்லை. வாரணாசி ரயில் நிலையத்திலேயே அமர்ந்துள்ளோம். தங்களை மாநில அரசு அழைத்துவர உதவ வேண்டும்' என கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
பிப் 20, 2025 14:33

இதுதான் யோகி மாடல்!


Rajathi Rajan
பிப் 20, 2025 13:28

கும்பமேளா கொடூர கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள் உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கொடூர கும்பமேளா நடந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சாக்கடை சங்கமத்தில் நீராட அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் ரயில்களில் முன்பதிவு பெட்டிகள், ஏசி பெட்டிகளை கூட அவர்கள் உடைத்து உள்ளே நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது.


சமீபத்திய செய்தி