உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதி மறுப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

நிதி மறுப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

சென்னை : தமிழகத்திற்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் முறையீட்டை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.எஸ்.எஸ்.ஏ., எனப்படும், 'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மே 21ல், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=87wv1yme&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த மனுவில், தமிழக அரசு கூறியுள்ளதாவது:கடந்த 2024 - -25ம் ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு நிறுத்துவது, கல்வி தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான மாநில அரசின் அதிகாரத்தை அபகரிப்பதற்கு சமம்.

அதிகாரம்

இதனால், 43 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எஸ்.எஸ்.ஏ., நிதியை நிறுத்திய மத்திய அரசின் முடிவை, அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது; சட்டவிரோதமானது; தன்னிச்சையானது; நியாயமற்றது என்று அறிவிக்க வேண்டும். நிலுவை தொகையான 2,151 கோடி ரூபாயுடன், 6 சதவீத வட்டி தொகையும் சேர்த்து, 2,291 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.மத்திய அரசுக்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டால், அதை விசாரிக்க அரசியலமைப்பின், 131வது பிரிவு, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது'புதிய கல்வியாண்டு துவங்கி, பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், 43 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டார்.அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'தமிழக அரசின் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க, எந்த அவசரமும் இல்லை. 'உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் முடிந்ததும், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்று கூறியது.

பின்னணி என்ன?

மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இரு மொழி கொள்கையை உறுதியாக பின்பற்றும் மாநிலம் என்பதால், இதை ஏற்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறி விட்டார். இந்த விவகாரம் தான், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.ஆனால், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, தமிழகத்திற்கான பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள், எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., - எம்.பி,,க்களுக்கும் இடையே, கடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில் மோதல் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து தான், எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கான நிதியை வழங்க உத்தரவிடக்கோரி, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Pascal
ஜூன் 19, 2025 20:03

இதில் என்ன பெருமை வேண்டியதிருக்கிறது. வெட்கப்பட வேண்டிய விசயம். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை உடனே விசாரிக்க மறுத்தால் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.


Selvaraj K
ஜூன் 13, 2025 01:31

எல்லா அரசியல் & அதிகார வர்க்கம் லட்சம் கோடினு வாழுது சேவை செய்யும் என்னம் இல்லை மக்கள் வரியில் ஏப்பம் விடலாம்னு பார்க்குது இதுக்கு எல்லாம் நீதி மன்றம் யார் பணம் ?


சுலைமான்
ஜூன் 10, 2025 22:13

எதுக்காக உங்களுக்கு உடனடியாக விசாரணை பண்ணனும்? நீங்க எதுக்கெடுத்தாலும் ஈவெரா வை தூக்கிப் பிடிச்சா இப்படித்தான் ஆகும்.... பேசாம ஆட்சியில் கலைஞ்சிட்டு போங்க


PathyUSA
ஜூன் 10, 2025 18:53

why would DMK & AIADMK ENFORCE 2 LANGUAGE POLICY IN T N.WHO ARE THESE POLITICIANS TO DECIDE HOW MANY LANGUAGES MUST BE LEARNT BY PEOPLE OF TN. ALSO WHEN CENTRAL GOVERNMENT DESIRES A THIRD LANGUAGE NOT NECESSARILY BE HINDI MUST BE TAUGHT AND IF THEYTHE STATES NEED EXTRA FUNDS ASSISTANCE TH E CENTRAL GOVERNMENT IS WILLING TO PROVIDE EXTRA FUNDS WHYDMK & ADMK MUST OPPOSE. TOO MUCH SELFISH POLITICAL PARTIES SEEDED BY KARUNANIDHI AND JAYALALITHA ARE AFRAID THEIR VOTE BANK WILL GET DILUTED.CENTRAL GOVERNMENT WHEN 2/3RD MAJORITY IN PARLIAMENT AND RAJYA SABHA AVAILABLE MUST ENFORCE 3 LANGUAGE FORMULA LIKE THEY ACTED IN THE CASE OF J & K REMOVING ARTICLE THAT GAVE SPECIAL STATUS


naranam
ஜூன் 10, 2025 16:05

தான் வெட்டியாகத் தொடரும் வழக்குகளை உடனுக்குடன் விசாரிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது தமிழக அரசின் அறிவின்மையைக் காட்டுகிறது. ஆதிக்க அரசியலை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.


திருட்டு திராவிடன்
ஜூன் 10, 2025 15:42

இங்க என்னடா நடக்கிறது. நேற்று இந்தப் பதிவு. இன்று கல்வித் தொகையை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு. என்னடா இந்த இந்தியாவுக்கு வந்த சோதனை.


Vel1954 Palani
ஜூன் 10, 2025 15:14

தலைப்பை திகில் கிளப்பும்படி மக்களுக்கு அச்சமூட்டும்படி வைத்துள்ளது . தள்ளிவைப்பு என்பதை நிராகரிப்பு என்று சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூன் 10, 2025 14:51

வரிகள் மட்டும் தமிழ்நாடு உடனடியாக தரவேண்டும் கல்வி செஸ் உட்பட ஆனால் ஒன்றிய அரசு பல நிபந்தனைகளை விதித்து தரமறுப்பார்கள் அதற்கு ஜால்ரா வேற என்னே ஊடக தர்மம்


கல்யாணராமன் சு.
ஜூன் 10, 2025 16:58

நீங்க பேரை பேசாம "திருடர்கள் முன்னேற்ற அல்லக்கைகள் அசோசியேஷன்" அப்படின்னு மாத்திக்கலாம் . ... சொல்ற கருத்தைப் படிச்சா IT அதிகாரிகள் மாதிரி தெரியலை . .... உங்க ஆபிசியிலேயும் செய்யற வேலைக்குத்தான் காசு குடுப்பாங்க ... பிடிக்காத வேலையை நான் பண்ணமாட்டேன், ஆனா அதுக்கும் எனக்கு சம்பளம் குடுக்கணும்னு சொன்னாவெளியேதான் அனுப்புவாங்க ....


மாயவரம் சேகர்
ஜூன் 10, 2025 14:36

தமிழக மக்களில் ஒருவராக மாணவர்களின் எதிர்காலம் கருதி, மாநில அரசு ,மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு இந்த மத்திய அரசின் நிதி எதற்காக கொடுக்கப்லடுகிறதோ அதற்கு செலவு செய்யாமல் இருக்கும் மாநில அரசின் வழக்கு தொடர வேண்டும். இந்த வழக்கை வைத்து தேர்தல் அரசியல் செய்ய நினைக்கும் திமுகவின் மற்ற பல கல்வி சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை கோர்ட்டாருக்கு தெரிவிக்க வேண்டும் .தநா மாநில பாஜக மத்திய அரசு வக்கீலுக்கு விவாதத்திற்கு பல உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டும்


venugopal s
ஜூன் 10, 2025 11:07

என்னவோ வழக்கையே தள்ளுபடி செய்தது போல் துள்ள வேண்டாம், அவசரகால வழக்காக கருத முடியாது என்று தான் சொல்லி இருக்கிறது. வழக்கம் போல் மத்திய பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் அடுத்த அடி காத்திருக்கிறது!


vivek
ஜூன் 10, 2025 13:33

ஓசி வேணுகோபால்.... பொறுத்திருந்து பாரும்... உன் 200 ரூபாய்க்கும் வேட்டு இருக்கு


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 10, 2025 14:53

என்ன


கல்யாணராமன் சு.
ஜூன் 10, 2025 21:27

அண்ணே, வேணுகோபாலண்ணே, அந்த டாஸ்மாக் வழக்கிலே நிறுவனத்துக்கு எதிரான வழக்குக்கு "இடைக்கால தடை" விதிச்சப்ப என்ன சொன்னீங்க , எப்படியெல்லாம் துள்ளிக் குதிச்சீங்க ? நினைவுக்கு வருதா?


Chandru
ஜூன் 11, 2025 13:38

Any right thinking person who is in interested in the development of TN will never support this third rate politics. Are you aware that TN in way behind in development compared to AP and Karnataka


சமீபத்திய செய்தி