உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்ணை கட்டுதே...! சதம் கடந்த தகதக தருணம்! இன்று 12 இடங்கள்

கண்ணை கட்டுதே...! சதம் கடந்த தகதக தருணம்! இன்று 12 இடங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதத்தை கடந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் காலம் முடிந்து பல நாட்கள் ஆகி விட்டது. ஆனால் வெயில் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. தினமும் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் வெப்பநிலை வழக்கமான ஒன்று தான். வடகிழக்கு பருவமழை தொடங்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலநிலை இப்படி இருக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.இந் நிலையில், தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகம் வெப்பம் பதிவான மற்ற இடங்கள் வருமாறு; மதுரை நகரம் - 104 டிகிரி பாரன்ஹீட் ஈரோடு, தஞ்சை, நாகை - 102 டிகிரி பாரன்ஹீட் சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி - 101 டிகிரி பாரன்ஹீட் கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, அதிராமபட்டினம் - 100 டிகிரி பாரன்ஹீட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
செப் 16, 2024 21:51

பொதுப்போக்குவரத்து கட்டாயமாக்கப்படுத்தலும், காடுகளை அழிக்கத் தடையும் - குறைந்த பட்சம் முறைப்படுத்துதல் - உடனடித் தேவைகள் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 09:06

பல்வேறு நாடுகள் இதற்காகக் கூட்டம் போடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றன .... காற்று மாசும், பருவநிலை மாற்றமும் விளைவுகள்தாம் ...


புதிய வீடியோ