உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிக்சட் டிபாசிட்டில் வரித்தொகை பிடித்தம்; வங்கி அதிகாரி மீது தாக்குதல்

பிக்சட் டிபாசிட்டில் வரித்தொகை பிடித்தம்; வங்கி அதிகாரி மீது தாக்குதல்

புதுடில்லி: வங்கியில் வைத்துள்ள பிக்சட் டிபாசிட் தொகையில், வரித்தொகை (டி.டி.எஸ்.,) பிடித்தம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர், வங்கி மேலாளரை தாக்கிய சம்பவம், குஜராத்தில் நடந்துள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள வஸ்த்ராப்பூரில் யூனியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெய்மன் ராவல் என்பவர், தன் சேமிப்புத்தொகையை, பிக்சட் டிபாசிட் செய்து வைத்துள்ளார். இதற்கான டி.டி.எஸ்., வரியை, வங்கி ஊழியர்கள் பிக்சட் டிபாசிட்டில் பிடித்தம் செய்து விட்டனர்.இது பற்றி அறிந்த வாடிக்கையாளர் ஜெய்மன் ராவல், வங்கி ஊழியர்கள் மீது குற்றம் கூறி, வாக்குவாதம் செய்தார். வாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர், வங்கி மேலாளரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில், வங்கி மேலாளரும் வாடிக்கையாளர் ஒருவரும் ஒருவரையொருவர் காலரைப் பிடித்துள்ளனர். அதை தொடர்ந்து வாடிக்கையாளர் வங்கி மேலாளரின் தலையில் தாக்குகிறார்.வாடிக்கையாளருடன் இருக்கும் ஒரு வயதான பெண், சர்ச்சையைத் தீர்க்க முயற்சிப்பதும், இருவரில் ஒருவரின் கையைப் பிடித்து இழுப்பதும் காணப்படுகிறது. வாடிக்கையாளரால் வங்கி அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வஸ்த்ராபூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M S RAGHUNATHAN
டிச 08, 2024 19:30

வாடிக்கையாளர் எவ்வளவு தொகை deposit செய்துள்ளார். வட்டி எவ்வளவு ? அவர் deposit செய்யும்போது 15 G அல்லது 15 H ஆவணம் கொடுத்துள்ளாரா போன்ற விவரங்கள் தெரிந்தால் தான் வங்கி செய்தது சரியா அல்லது தவறா என்று தெரியும். வாடிக்கையாளர் எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. Ignorance of law can not be excuse.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 08, 2024 22:42

நீங்கள் சொல்வது உண்மை. ஆனாலும், வரி பிடித்தம் செய்யவேண்டாம் என்று உரிய படிவங்களை பூர்த்தி செய்து கையொப்பம் இட்டு கொடுத்த பின்னரும் எனக்கு வரி பிடித்தம் செய்தார்கள் தபால் அலுவலகத்தில். முறையீடு செய்ய அதிகாரியை நேரில் சந்தித்த போது ஒரே வார்த்தையில் பதில் " சாரி"


சமீபத்திய செய்தி