உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ப்பு நாய் சாவு வாலிபர் தற்கொலை

வளர்ப்பு நாய் சாவு வாலிபர் தற்கொலை

மாதநாயகனஹள்ளி: அன்புக்குரிய வளர்ப்பு நாய் இறந்த துயரத்தில், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு ருரல், நெலமங்களாவின் ஹெக்கடதேவனபுரா கிராமத்தில் வசித்தவர் ராஜசேகர், 33. இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயை வாங்கினார். அதற்கு 'பவுன்சி' என, பெயர் சூட்டி வளர்த்து வந்தார். அதன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.உடல் நிலை பாதிக்கப்பட்ட பவுன்சி, நேற்று முன் தினம் இறந்தது. அதன் உடலை ராஜசேகர் தன் நிலத்தில் புதைத்துவிட்டு, வீட்டுக்கு வந்தார். அன்போடு வளர்த்த நாய் இறந்த துயரத்தை தாங்க முடியாமல் மனம் நொந்த அவர், நேற்று அதிகாலை நாயை கட்டி வைத்திருந்த இரும்பு சங்கிலியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாதநாயகனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !