உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ் மார்க் - 1ஏ' இலகுரக போர் விமானம் இம்மாத இறுதிக்குள் நம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும்' என ஹெச்.ஏ.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.நம் ராணுவத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை தயாரிக்க கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன், 2021ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. மொத்தம், 48,000 கோடி ரூபாய் மதிப்பில், 83 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 2024, மார்ச் 31க்குள் நம் விமானப்படையிடம் முதல் விமானத்தை ஒப்படைக்க திட்டமிடப்பட்டது.இந்த விமானத்தின் இன்ஜினை அமெரிக்காவின், 'ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கிடையே, புதிய இன்ஜின்களை ஒப்படைப்பதில் அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தியதால், இதுவரை நம் விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல்., நிறுவனம் ஒப்படைக்கவில்லை.இதை, நம் விமானப்படையின் தலைமை தளபதி அமர் பிரீத் சிங் வெளிப்படையாகவே பல முறை விமர்சித்தார். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார்.இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தேஜஸ் மார்க் - 1ஏ போர் விமானத்தை, இம்மாத இறுதிக்குள் விமானப்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh G
ஜூன் 07, 2025 11:04

2024 மார்ச் முடிந்து 1 வருடம் aakudu


Varuvel Devadas
ஜூன் 04, 2025 18:13

The output of our IITs, NITs, and IISc Bangalore should be restricted to going abroad, and give good jobs in our motherland, and allow them to invent more in our motherland to strengthen our country instead of strengthening the U.S and European countries. They may be provided with attractive salaries, good infrastructure at the workplace, etc. If it is done, in my view, India can become a superpower within a decade, and we need not beg for anything from other developed countries.


Sathyanarayanan Ramakrishnan
ஜூன் 04, 2025 11:21

அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல மன நிலையில் இருக்கின்றாரா ஆமோதிக்க.


Dharmavaan
ஜூன் 04, 2025 10:54

நம்பகமில்லாத இறக்குமதியை நம்பி எப்படி முடிப்பது உறுதியாகும்


Ganapathy
ஜூன் 04, 2025 08:25

ட்ரம்ப் என்ஜின் கொடுக்க ஒப்புகிட்டாரா?


Kasimani Baskaran
ஜூன் 04, 2025 03:36

அமெரிக்கா இதற்கும் கட்டை போடும் என்று எதிர்பார்க்கலாம்..


Karthik
ஜூன் 04, 2025 10:32

அமெரிக்கா போட்ட கட்டை தான் இதுவரையிலான தாமதத்திற்கு காரணமே..


புதிய வீடியோ