உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி., -காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்று துவக்கம்

பீஹார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி., -காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்று துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் டில்லியில் இன்று (ஏப்., 15) ஆலோசனை நடத்துகிறார்.இந்த ஆண்டு இறுதியில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்போதே தேர்தல் பிரசாரங்கள் துவங்கி விட்டன. மஹாராஷ்டிரா, ஹரியானா, டில்லி மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ள பா.ஜ., பீஹாரில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. இண்டி கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவோ, தன் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். தொடர் தோல்வியை சந்தித்த காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க கூடாது என, லாலு கூறி வருகிறார்.பீஹார் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் டில்லியில் இன்று(ஏப்., 15) ஆலோசனை நடத்துகிறார். டில்லி விமான நிலையத்தில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: சட்டசபை தேர்தல் குறித்து இன்று காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வ கூட்டம் நடக்கிறது. தேர்தலுக்கான உத்திகள் குறித்து நாங்கள் விவாதிப்போம். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஏப் 15, 2025 18:27

இரண்டு கட்சிகளுமே இந்த நாட்டுக்கு எதிரான கட்சிகள் தான்.... அவைகள் எல்லாம் இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்... அகற்றப்பட வேண்டும்.


Nada Rajan
ஏப் 15, 2025 13:51

முதலில் லாலு மீது உள்ள ஊழல் வழக்கில் தீர்ப்பு கொண்டு வாருங்கள். பின்னால் தொகுதி பங்கீடு குறித்து பேசட்டும்